உள்ளடக்கத்துக்குச் செல்

அட்டகாமைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்டகாமைட்டு
Atacamite
தெற்கு ஆத்திரேலியாவில் கிடைத்த அட்டகாமைட்டு கனிமம்
பொதுவானாவை
வகைஆலைடு கனிமம்
வேதி வாய்பாடுCu2Cl(OH)3
இனங்காணல்
நிறம்பிரகாசமான பச்சை, அடர் மாணிக்கப் பச்சை முதல் கரும் பச்சை
படிக இயல்புபட்டகப் படிகங்கள், இழை, மணிகள், திரட்சி
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
இரட்டைப் படிகமுறல்சிக்கலான இரட்டை குழுக்களுடன் தொடர்பு மற்றும் ஊடுருவல்
பிளப்புசரிபிளவு {010}, சுமார் {101} இல்
முறிவுசங்குருவம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை3–3.5
மிளிர்வுவிடாப்பிடியானது
கீற்றுவண்ணம்ஆப்பிள் பச்சை
ஒளிஊடுருவும் தன்மைஒளி புகும் மற்றும் கசியும்
ஒப்படர்த்தி3.745–3.776
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (−)
ஒளிவிலகல் எண்nα = 1.831 nβ = 1.861 nγ = 1.880
இரட்டை ஒளிவிலகல்δ = 0.049
பலதிசை வண்ணப்படிகமைX = வெளிர் பச்சை; Y = மஞ்சள் பச்சை; Z = சாம்பல் பச்சை
2V கோணம்கணக்கிடப்பட்டது: 74°
நிறப்பிரிகைr < v, வலிமை
மேற்கோள்கள்[1][2][3][4]

அட்டகாமைட்டு (Atacamite) என்பது Cu2Cl(OH)3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். 1802 ஆம் ஆண்டு சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் திமிட்ரி டி கல்லிட்சினால் இது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.[1] அட்டகாமா பாலைவனம் என்பது இந்த கனிமத்தின் பெயராகவும் உள்ளது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் அட்டகாமைட்டு கனிமத்தை Ata[5]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

தோற்றம்

[தொகு]

அட்டகாமைட்டு என்பது போட்டாலாக்கைட்டு, கிளினோ அட்டகாமைட்டு மற்றும் பாரடகாமைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து பல்லுருவக் கனிமமாகக் காணப்படுகிறது.[1] அட்டகாமைட்டு என்பது ஒப்பீட்டளவில் அரிதான கனிமமாகும். வறண்ட காலநிலையின் ஆக்சிசனேற்றம் அல்லது வானிலை மண்டலத்தில் முதன்மை செப்பு தாதுக்களிலிருந்து உருவாகிறது. சல்பைடு மாற்றப் பொருட்களாக, எரிமலைவாய் படிவுகளிலிருந்து பதங்கமாதல் மூலம் உருவாகிறதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[2] சிலி, சீனா, உருசியா, செக் குடியரசு, அரிசோனா மற்றும் ஆத்திரேலியாவில் உள்ள ஆக்சிசனேற்றப்பட்ட செப்பு படிவுகளிலும் அட்டகாமைட்டு கனிமம் இயற்கையாகவே கண்டறியப்பட்டுள்ளது. குப்ரைட்டு, புரோச்சாண்டைட்டு, இலினரைட்டு, காலெடோணைட்டு , மாலகைட்டு, கிரிசோகோல்லா மற்றும் இதன் பல்லுருவங்களுடன் இணைந்து காணப்படுகிறது.[2]

செயற்கைத் தோற்றம்

[தொகு]

சுதந்திர தேவி சிலையின் படினாவிலும், பண்டைய வெண்கலம் மற்றும் செம்பு கலைப்பொருட்களின் மாறுபாடாகவும் அட்டகாமைட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யூரேசியா, உருசியா மற்றும் பெர்சியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம், கையெழுத்துப் பிரதிகள், வரைபடங்கள் மற்றும் ஓவியங்களில் இந்த கனிமம் ஒரு நிறமியாகக் கண்டறியப்பட்டுள்ளது.[6]

உயிரிக்கனிமம்

[தொகு]

இரத்தப் புழுக்களின் தாடைகளில் அட்டகாமைட் ஒரு உயிரி கனிமமாக காணப்படுகிறது. [7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Atacamite on Mindat.org
  2. 2.0 2.1 2.2 Handbook of Mineralogy
  3. Atacamite on Webmineral
  4. Mineralienatlas
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  6. "Atacamite – CAMEO". cameo.mfa.org (in ஆங்கிலம்). Retrieved 2017-10-15.
  7. "High abrasion resistance with sparse mineralization: copper biomineral in worm jaws". Science 298 (5592): 389–92. October 2002. doi:10.1126/science.1075433. பப்மெட்:12376695. Bibcode: 2002Sci...298..389L. https://archive.org/details/sim_science_2002-10-11_298_5592/page/388. 
  8. "Zinc and mechanical prowess in the jaws of Nereis, a marine worm". Proc. Natl. Acad. Sci. U.S.A. 100 (16): 9144–9. August 2003. doi:10.1073/pnas.1632658100. பப்மெட்:12886017. Bibcode: 2003PNAS..100.9144L. 


மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டகாமைட்டு&oldid=4372629" இலிருந்து மீள்விக்கப்பட்டது