அட்சய லக்ன பத்ததி
![]() | இந்த article விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
![]() |
![]() |
அட்சய லக்ன பத்ததி (Akshaya Lagna Paddhati-ALP) என்பது லக்னத்தை, வயதிற்கு ஏற்ப வரிசைப்படுத்தி பலன் கூறும் சோதிட முறை.[1][2][3].[4][5][6] ஒவ்வொரு வயதின் தோற்றம் வளர்தல் எவ்வளவு சாத்தியமோ, அதே போல் வரிசையாக லக்னம் வளரும் முறையை குறிக்கும் புள்ளி அட்சய லக்ன புள்ளியாகும். “அட்சய லக்னம்’’ என்பது லக்னப் புள்ளியில் இருந்து ஒரே சீரான வயதிற்கு ஏற்ப வளர்ச்சியை குறிப்பது. லக்னம் மற்றும் லக்ன புள்ளியில் இருந்து வளர்ச்சி பெறும் அமைப்பு அட்சய லக்னப் புள்ளி ஆகும். வேத சோதிடத்தைக் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்கள் மற்றும் நிபுணர்களால் இதைப் படிப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும், சோதிட பலன் கூறுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அட்சய லக்ன பத்ததி ஆண்ட்ராய்டு செயலி மென்பொருளும் இன்று பயன்பாட்டில் உள்ளது[7].
" அட்சய லக்ன பத்ததி சோதிடத்தின் ஓர் விளக்கம்
- “அட்சயம்’’ என்றால் வளருதல்
- “லக்னம்’’ என்றால் தோற்றம்
- “பத்ததி’’ என்றால் வரிசைப்படுத்துதல் (ஒழுங்கு படுத்துதல்) "
கணிக்கும் முறை
[தொகு]ஒரு வயது, ஒரு மாதம், பத்து நாட்கள்[8][9]. இந்த கால அவகாசத்திற்கு பிறகு, ஒருவருடைய லக்ன புள்ளி மாற்றம் பெறுகிறது. அதாவது ஜென்ம லக்னம் தோராயமாக ஒராண்டிற்கு ஒருமுறை மாற்றம் பெறுகிறது அல்லது வளர்ச்சியடைகிறது. இந்த வகையில் ஒரு பாவக கட்டத்தை கடப்பதற்கு பத்தாண்டு காலம் தேவைப்படுகிறது
1, 4, 7, 10 ஆகிய இடங்களை கேந்திரம் என்பார்கள்[10][11]. ஒருவருடைய லக்ன புள்ளி 1, 4 ,7, 10 ஆகிய இடங்களை தொட்ட பிறகுதான் அவர்களுக்கு திருமணம் என்பது நடைபெறும். அதேப்போல் 2, 5, 8, 11 ஆகிய இடங்களில் லக்ன புள்ளி இருக்கும்பொழுது திருமணம் என்பது நடைபெறாது. ஏனெனில் 2, 5, 8, 11 ஆகிய பாவகங்களில், கடந்த ஜென்மத்தின் கர்ம பதிவுகள் இடம்பெற்றிருக்கும். அதே போல் 3, 6, 9, 12 ஆகிய பாவங்களில் திருமணம் நடைபெறுமா..? என்றால் உறுதியாக, அறுதியிட்டுக் கூற இயலாது. ஏனெனில் இந்த பாவகங்கள் அதாவது 3, 6, 9, 12 ஆகிய பாவகங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடக்கூடியவை.
பொதுவாக மேஷ லக்னத்தில் பிறந்த ஒருவர், முதல் 10 ஆண்டுகள் வரை பெற்றோர்களை சார்ந்து இருக்கிறார். அதனால் இவரை சாதகர் என்று குறிப்பிடுகிறார்கள்.
இரண்டாவது பத்தாண்டுகள் வரை அதாவது அவருடைய 11 வயதிலிருந்து 20 ஆவது வயது வரை, அவரது குடும்ப சூழலை அடிப்படையாகக் கொண்டு, அவரது கல்வி, உயர் கல்வி போன்றவை நிர்ணயிக்கப்படுகிறது. இப்போதைய கல்வி முறையை பொறுத்து 17 வயது வரை (ஏ லெவல்) என்ற கல்வியை அடிப்படையாக வழங்கி வருகிறோம். அதனாலதான் இரண்டாவது பத்தாண்டை, கல்வி என்று வரையறை செய்திருக்கிறார்கள்.
21 முதல் 30 வயது வரை மூன்றாம் பாவகமாக வருகிறது. இது தான் திருமணம், வேலை வாய்ப்பு போன்றவற்றை இணைத்திருக்கிறார்கள். இந்த வயதில் எம்முடைய உடலின் வளர்ச்சி, திருமணத்திற்கு ஏற்றதாக மாற்றம் பெறுகிறது. இதனால்தான் இந்த மூன்றாவது பாவகத்தை வீரியம், முயற்சி, வெற்றி என்று குறிப்பிடுகிறார்கள்.
31 முதல் 40 வரை உள்ள கால கட்டத்தை ‘வீடு’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதாவது 31'வது வயதில் ஒருவர் வீடு கட்ட தொடங்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அவர் தன்னுடைய வாழ்க்கை சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் என்ன செய்யவேண்டும் என்பதை வரையறை செய்திருக்கிறார்கள்.
இந்த மூன்று வகையான பிரிவுகளையும், மூன்று வகையான கர்ம பதிவுகள் இயக்குகின்றன. இந்நிலையில் 1, 4, 7, 10 ஆகிய பாவகங்களை ஜாதகர்களின் தாயார் மற்றும் அவர்களின் பவுதிக கர்ம பதிவு தான் இயக்குகிறது. ஏனெனில் இந்த பருப்பொருள் என்னும் உடல், எம்முடைய தாயாரின் மூலமாகத்தான் உருவானது. 2, 5, 8, 11 ஆகிய பாவகங்களில், கடந்த ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள், புண்ணியங்கள் ஆகியவற்றின் கர்ம பதிவுகள் இயக்குகிறது. 3, 6, 9, 12 ஆகிய பாவகங்களில் எதிர்காலத்தில் நாம் செய்யத் திட்டமிடும் விடயங்களை குறித்த பதிவுகளால் இயங்குகிறது. அதாவது இவை எம்முடைய தந்தையாரின் கர்ம பதிவுகளை இயக்குகிறது.
புத்தகங்கள்
[தொகு]அட்சய லக்ன பத்ததி பற்றி இதுவரை 10 புத்தகங்கள் வெளிவந்துள்ளன[12][13].
புத்தகம் 1: பகுதி 1: அக்ஷய லக்ன பத்தாதி (ALP) ஜோதிடம் அறிமுகம், கிரக பண்புகள், 3 வகையான கர்மாக்கள், தச புக்திக்கும் கோச்சருக்கும் இடையிலான தொடர்பு மற்றும் பரிகார கோயில்கள்.
புத்தகம் 2: பகுதி 2: அக்ஷய லக்ன பத்தாதி (ALP) ஜோதிடம் அறிமுகம், கிரக பண்புகள், 3 வகையான கர்மாக்கள், தச புக்திக்கும் கோச்சருக்கும் இடையிலான தொடர்பு மற்றும் பரிகார கோயில்கள்.
புத்தகம் 3: கோச்சரைப் பற்றிய அறிமுகம், சிம்ம ராசியில் உள்ள அனைத்து நட்சத்திரங்களின் பண்புகள், மேஷ (மேஷம்) லக்ன ALP மற்றும் கோச்சரைப் பயன்படுத்தி 12 பாவங்களைப் பற்றிய குறிப்புடன் அனைத்து கிரகங்களும் - கணிப்புகளைச் செய்வதற்கான பயனுள்ள நுண்ணறிவுகளுடன் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
புத்தகம் 4: தனுசு ராசியில் உள்ள அனைத்து நட்சத்திரங்களின் பண்புகள் பற்றிய அறிமுகம், திருமணப் பொருத்தம் மற்றும் ஜாதக பகுப்பாய்வு.
புத்தகம் 5: திருமணப் பொருத்தம், அக்ஷய ராசி மற்றும் நட்சத்திரப் பொருத்தம், ஜாதகங்களின் எடுத்துக்காட்டுகள் மற்றும் திருமணப் பொருத்தம் குறித்து ALP ஜோதிடர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள்.
புத்தகம் 6: அக்ஷய லக்ன பத்தாதி (ALP) ஜோதிடத்தின் முழுமையான கையேடு/முக்கிய அம்சங்கள், கர்மா விரிவாக, அக்ஷய லக்னம்/கோச்சர்/விம்ஷோத்தரி தசா புக்தி, அனைத்து 12 பாவங்களுக்கும் அக்ஷய லக்னம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் அக்ஷய லக்னத்தை கையேடாகப் பயன்படுத்துவது எப்படி.
அட்சய லக்ன பத்ததி மென்பொருள்
[தொகு]1,00,000 க்கும் மேற்பட்டோர் அட்சய லக்ன பத்ததி ஆண்ட்ராய்டு பயன்பாட்டு மென்பொருளை பதிவிறக்கம் செய்துள்ளனர்[14].
பயிற்சி நிலைகள்
[தொகு]- அடிப்படை ALP சோதிடப் பயிற்சி வகுப்பு / பாடநெறி[15]
- மேம்பட்ட நிலை 1 - ALP சோதிடப் பயிற்சி வகுப்பு / பாடநெறி
- மேம்பட்ட நிலை 2 - ALP சோதிடப் பயிற்சி வகுப்பு / பாடநெறி
- முதுகலை ALP சோதிடப் பயிற்சி வகுப்பு / பாடநெறி
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.dinakaran.com/akshaya-astrology-laknam/
- ↑ https://www.amazon.in/Atchaya-Lakna-Pathathi-Part-2-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF-ebook/dp/B0984V57RH?ref_=ast_author_dp
- ↑ https://www.alpastrology.com/
- ↑ https://jothidam.tv/article-single.php?id=13
- ↑ https://www.sangritoday.com/spotlight/revolutionizing-astrology-the-inventor-behind-the-alp-method-unveils-ground-breaking-concept-moving-lagnam
- ↑ https://rajasthanexpress.in/index.php/2024/05/31/revolutionizing-astrology-the-inventor-behind-the-alp-method-unveils-ground-breaking-concept-moving-lagnam/
- ↑ https://play.google.com/store/apps/details?id=com.guruvashishta.akshayalagnapaddati
- ↑ "ALP Book in Amazon, shown here for reference only". Retrieved 2025-05-09.
- ↑ https://alpastrologist.com/index.html
- ↑ https://www.udumalai.com/atchaya-lakna-pathathi-part-1.htm
- ↑ https://www.insightssuccess.in/podhuvudaimoorthy-a-skilled-soothsayer/
- ↑ https://www.alpastrology.com/books.html
- ↑ https://www.amazon.ca/stores/pothuvudaimoorthy/author/B0C73HBMN6?ref=ap_rdr&isDramIntegrated=true&shoppingPortalEnabled=true
- ↑ https://play.google.com/store/apps/details?id=com.guruvashishta.akshayalagnapaddati
- ↑ https://www.alpastrology.com/live.html