அடோனிசு டெட்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடோனிசு டெட்ரா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: ஆக்டினோப்டெரிஜீ
வரிசை: சராசிபார்ம்சு
குடும்பம்: அலெசிடிடே
பேரினம்: லெபிடார்லசு
டி. ஆர். இராபர்ட்சு, 1966
இனம்: லெ. அடோனிசு
இருசொற் பெயரீடு
லெபிடார்லசு அடோனிசு
டி. ஆர். இராபர்ட்சு, 1966[1]

அடோனிசு டெட்ரா (Adonis tetra) (லெபிடார்லசு அடோனிசு) ஜெல்லிபீன் டெட்ரா என அழைக்கப்படுவது அலெஸ்ட்டீடே குடும்பத்தினைச் சார்ந்த மிகச் சிறிய ஆப்பிரிக்க மீனாகும். இது அடோனிசு பேரினத்தைச் சார்ந்த ஒரே ஒரு சிற்றினமாகும்.[2]

சரகம்[தொகு]

லெபிடார்லசு அடோனிசு அட்லாண்டிக் கரையோர கானா, சியேரா லியோனி மற்றும் கோட் டிவார் அருகிலுள்ள நன்னீர் வாழ்விடங்களில் காணப்படுகிறது.

அளவு[தொகு]

அடோனிஸ் டெட்ரா 2.1 செ. மீ. நீளமுடையது. இது நியான் டெட்ராவை விட மிகச் சிறியது. இது பொதுவாக மீன் காட்சியகங்களில் வளர்க்கப்படும் மிகச்சிறிய மீன்களில் ஒன்றாகும்.

காப்பு நிலை[தொகு]

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில் அடோனிசு டெட்ரா அழிவாய்ப்பு இனம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது வசிக்கும் நீர்வாழிடங்களில் மாசு அளவு அதிகரித்து வருவது கவலை தருவதாக உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. IUCN Red List: https://www.iucnredlist.org
  2. "Lepidarchus adonis". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. October 2011 version. N.p.: FishBase, 2011.
  3. Mercury pollution in Pra River: http://www.gradualchange.com/showabstract.php?pmid=16243381 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடோனிசு_டெட்ரா&oldid=3127139" இருந்து மீள்விக்கப்பட்டது