அடையாறு நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடையாறு நூலகம் மற்றும் ஆய்வு மையம் (Adyar Library and Research Centre) 1886 ஆம் ஆண்டு பிரமஞான சபையைச் சேர்ந்த என்றி சிடீல் ஆல்காட் என்ற பிரமஞானியால் சென்னை அடையாறில் நிறுவப்பட்டது.

வரலாறு[தொகு]

1886 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் என்றி சிடீல் ஆல்காட் இந்த ஆல்காட் நூலகத்தை நிறுவினார். 24 மொழிகளில் 200 நூல்களைக் கொண்ட ஆல்காட்டின் நூற்தொகுப்புக்களைக் கொண்டு இந்நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்பொழுதெல்லாம் ஆல்காட் அரிய பல நூல்களை சேகரித்துக் கொண்டு வந்து இந்நூலகத்தில் அடிக்கடி சேர்ப்பார். 1907 –ஆம் ஆண்டில் ஆல்காட் மறைந்த பிறகு பிரம்மஞான சபையைச் சேர்ந்த மற்ற பிரமஞானிகளால் இந்நூலகம் தொடர்ந்து நடத்தப்பட்டது. தற்போது, இந்நூலகத்தில் 2,50,000 நூல்களும் 20,000 ஓலைச்சுவடிகளும் வைக்கப்பட்டுள்ளன. உலகளவில் நிறுவப்பட்டுள்ள முக்கியமான நூலகங்களில் ஒன்றாக இந்நூலகமும் கருதப்படுகிறது.

முதலில் இந்நூலகம் பிரம்மஞான சபையின் அலுவலகத்தில் அமைந்திருந்தது. 1966 ஆம் ஆண்டில் இதற்கென கட்டப்பட்ட தனி கட்டிடத்தில் அடையாறு நூலகமாக இயங்கிவருகிறது. ஒரு பொது அருங்காட்சியமாக விளங்குவதோடு பல பழங்கால நூல்களையும் பல்வேறு மூல நூல்களையும் தன்னகத்தே இந்நூலகம் கொண்டுள்ளது. இந்நூலகமானது சமசுகிருத முதுகலை மாணவர்களாலும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் படிப்பை படிக்கும் மாணவர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1990 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவின் வள்ளல் எலிம்சுடன் காம்ப்பெல் (1891 – 1990) இந்நூலகத்திற்கு உயில்வழியாக நிதியுதவி அளித்தார்[1]. ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் காம்பெல் மெய்யியல் ஆராய்ச்சி நூலகத்தை நிறுவினார்.

சிக்காகோ பல்கலைக்கழகம் அடையாறு நூலகத்தின் மிகத் தொன்மையான நூல்கள் மற்றும் பழங்கால சின்னங்களை உயர்தர தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாக்க முயற்சித்து வருகிறது[2]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடையாறு_நூலகம்&oldid=3306121" இலிருந்து மீள்விக்கப்பட்டது