அடையாறு கழிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது சென்னைக் கடற்கரையில் அமைந்துள்ளது. ஐயர், பணிக்கர் ஆகிய இரு கடலியல் வல்லுநர்கள், இந்த ஆற்றின் கழிமுக ஏற்றத்தாழ்வுடைய உப்புத்தன்மையை ஆய்ந்து விளக்கியுள்ளனர். இவ்விடத்தில் காணப்படும் முக்கிய உயிரிகளாவன: பலவகைக் கடற்சாமந்திகள், வளை வாழ்வளைதசைப்புழுக்கள், வளை தோண்டும் வளைதசைப் புழுக்கள்,நெப்டியுனஸ், வெருனா, நண்டுகள்,கிளிபனோரியஸ், துறவி நண்டுகள், ஆஸ்ட்ரியா, மெரிட்ரிக்ஸ் மெல்லுடலிகள் மற்றும் சில மீன்கள் ஆகும். இங்கு நீரின் உப்புத் தன்மையும் மற்ற பண்புகளும் அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்கின்றன. ஆகையால் இங்கு வாழும் உயிரிகள் பல வகையான தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. கழிமுகங்களில் மிகுதியாக வண்டல் படிகின்றது. ஒளி புகுதலும் குறைந்த அளவில் தான் காணப்படுகின்றது. இத்தகைய சூழலுக்கேற்ப இங்குள்ள தாவரங்களும், விலங்குகளும் பல தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.[1]

[[ பகுப்பு: திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் ]]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி 5
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடையாறு_கழிமுகம்&oldid=2596904" இருந்து மீள்விக்கப்பட்டது