உள்ளடக்கத்துக்குச் செல்

அடைப் பிரதமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடைப் பிரதமன்
அடைப் பிரதமன்
வகைகூழ்மம்
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு-விருந்துக்குப் பின்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிகேரளம்
முக்கிய சேர்பொருட்கள்அரிசி அடை, தேங்காய்ப்பால், வெல்லம் அல்லது சீனி, நெய்

அடைப் பிரதமன் (Ada pradhaman) என்பது, பச்சரிசி மாவில் செய்த அடை, தேங்காய், வெல்லம் சேர்த்து சமைக்கப்படும் ஒரு பாரம்பரிய கேரள மாநில இனிப்பு வகையைச் சேர்ந்த உணவுப் பண்டமாகும்.[1][2][3] பிரதமன் என்றால் பாயசம் என்று சொல்லப்படுகிறது. இதில் பல வகைகள் உண்டு. ஓணம் பண்டிகை நாளில் கேரளாவின் ஒவ்வொரு வீட்டிலும் அடை பிரதமன் சிறப்பாக தயாரிக்கப்படுகிறது, இது, கேரள விருந்தான சத்யாவின் முக்கிய உணவாக உள்ளது.

செய்முறை

[தொகு]

பச்சரிசியை இடித்துப்பொடியாக்கி, நீர் சேர்த்து குழைத்து, நெய் அல்லது தேங்காய்ப்பால் சேர்க்கலாம். இதை, வாழையிலையில் பரப்பி வைக்கவும். இதை நீராவியில் வேகவைக்க வேண்டும். பின்னர், அடுப்பில் வைத்த பாத்திரத்தில், நாழி அரிசிக்கு ஆறு பலம் சர்க்கரை அல்லது வெல்லம் என்ற கணக்கில் சேர்த்து நீர் வற்றும் வரை கிண்டவும். இடையிடையே பசு நெய் சேர்ப்பதும் உண்டு. தேங்காயை நனறாகத் துருவி அதிலிருந்து மூன்று முறை பால் எடுக்க வேண்டும். அதிரச மாவு போன்ற பதத்தில் இருக்கும் அரிசிமாவை எடுத்து மூன்றாம் முறை எடுத்த தேங்காய்பாலை சேர்த்துக் கிண்டவும். பின்னர், இரண்டாம் முறை எடுத்த பாலையும், பின்னர் முதல் முறை எடுத்த பாலையும் சேர்க்க வேண்டும். சிலர் எள்ளும் சேர்ப்பதுண்டு. அடுப்பில் உள்ள இந்தக் கலவையே பிரதமன் எனப்படும். அரிசிக்கு மாற்றாக கோதுமையை வைத்து செய்யப்படுவதும் உண்டு.

சான்றுகள்

[தொகு]
  1. S, Harikumar J. (28 August 2020). "How to prepare the mainstay of classic ada pradhaman fresh from the kitchen". The Hindu. https://www.thehindu.com/life-and-style/food/how-to-prepare-the-mainstay-of-classic-ada-pradhaman-fresh-from-the-kitchen/article32465762.ece. 
  2. Nair, Sudhir. "Ada Pradhaman Recipe by Sudhir Nair - Courtyard Bengaluru - Outer Ring Road". என்டிடிவி (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.
  3. Kapoor, Sanjeev Dak (2009). Dakshin Delights (in ஆங்கிலம்). Popular Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7991-400-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைப்_பிரதமன்&oldid=4014448" இலிருந்து மீள்விக்கப்பட்டது