அடூர் கஜமேளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அடூர் கஜமேளா (Adoor Gajamela) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சியான அடூர் பார்த்தசாரதி கோயிலில் நடக்கும் விழா ஆகும். திருவல்லாவுக்கு தெற்கே எம்.சி. சாலையில் 35 கி.மீ. தொலைவில் அடூர் உள்ளது.

சனவரி மாதம் நடக்கும் கஜமேளாவைக் காண்பதற்கு கூட்டம் அலைமோதும். அச்சமயம் ஓன்பது அலங்கரிக்கபட்ட யானைகள் நடைபோட்டு ஒன்பது கி.மீ. தொலைவில் உள்ள சென்னபட்டி கோயிலுக்கு செல்லும். இதேபோல் கிருஷ்ணனின் பிறந்த நாளான அஷ்டமி ரோகிணியில் 10 நாள் திருவிழா நடக்கும். இத் திருவிழாவின்போது யானை ஊர்வலமான கஜமேளா, ஒட்டன்துள்ளல், வேலகளி போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.[1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடூர்_கஜமேளா&oldid=3029516" இருந்து மீள்விக்கப்பட்டது