உள்ளடக்கத்துக்குச் செல்

அடி (வினைச்சொல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடி என்னும் சொல் பல்வேறு பொருள்களை உணர்த்தும் ஒரு பொதுச்சொல்.
அடி என்னும் வினைச்சொல் கோலால் அடித்தல், கல்லால் அடித்தல் முதலான செயல்களை உணர்த்தும். கோலால் அடிப்பவர் கோலைப் பிடித்துக்கொண்டே அடிப்பர். கல்லால் அடிப்பவர் கல்லை எறிந்து அடிப்பர். இவை இரண்டும் செயல்படும் பாங்கில் உள்ள வேறுபாடுகள்.

உருவக வழக்கு
  • கண் அடித்தான் என்னும்போது அடித்தல் என்னும் சொல் பார்வை வீச்சை உணர்த்துகிறது.
  • சொல்லால் அடித்தான் என்று இல்லாததும் பொல்லாததுமான சொற்களை வீசுவதைக் குறிப்பிடுவர்.

வினைச்சொல் வடிவங்கள்

[தொகு]

அள் [1] - அண் [2] [3] - அடு [4] - என்னும் வேர்ச்சொல் வழியில் பிறந்த வினைச்சொல் 'அடி' என்பதாகும்.

  • வினைமுற்று வடிவம்
    • காலம் காட்டுதல் - அடித்தான், அடிக்கிறான், அடிப்பான்
    • இடம் காட்டுதல் - அடித்தேன், அடித்தாய், அடித்தான்
  • வினை-எச்ச வடிவம் - அடித்து, அடிக்க.
  • பெயர்-எச்ச வடிவம் - அடித்த, அடிக்கிற, அடிக்கும்

அடிக்குறிப்பு

[தொகு]
  1. பொருத்தி அள்ளுதல்
  2. அண்ணிப்பபான் (பொருந்தி இருப்பவன்) தாள் வாழ்க - திருவாசகம்
  3. அண்ணன் - பொருந்திய உறவுக்காரன்
  4. அடுத்து இரு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடி_(வினைச்சொல்)&oldid=1752835" இலிருந்து மீள்விக்கப்பட்டது