அடி குழாய் இறைப்பி


அடிகுழாய் இறைப்பி (hand pump) என்பது கைமுறையாக திரவங்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்துவதற்கு பயன்படும் ஓர் இயந்திரம் ஆகும். இதில் கைப்பிடியை மேல் நோக்கி தூக்கும் போது உந்து தண்டு கீழ்நோக்கி நகரும். அப்போது உந்து தண்டோடு பொருத்தப்பட்டிருக்கும் அடைப்பான் திறந்து கொள்ளும். கீழ் பகுதியில் இருக்கும் அடைப்பான் மூடியிருக்கும். கைப்பிடி கீழ்நோக்கி நகரும் போது உந்து தண்டோடு பொருத்தப்பட்டிருக்கும் அடைப்பான் மூடிக்கொள்ளும். கீழ் பகுதியில் இருக்கும் அடைப்பான் திறந்து கொள்ளும். இதனால் தண்ணீர் மேலேறுகிறது.