அடிலைடே அமெசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடிலைடே அமெசு (Adelaide Ames) (ஜூன் 3, 1900 – ஜூன் 26, 1932) ஓர் அமெரிக்க வானியலாளரும் ஆவார்டுபல்கலைக்கழக ஆராய்ச்சி உதவியாளரும் ஆவார். இவர் பால்வெளிகளின் ஆய்வுக்குப் பெரும்பங்களிப்பு செய்துள்ளார். சேப்ளேவுடன் இணைந்து இவர் எழுதிய A Survey of the External Galaxies Brighter Than the Thirteenth Magnitude எனும் ஆய்வு பின்னர் சேப்ளே-அமெசு அட்டவணை எனப்பட்டது.[1] இவர் அமெரிக்க வானியல் கழக உறுப்பினர் ஆவார். இவர் சிசிலியா பெய்னெ-கொபாசுகின் அவர்களின் சமகாலத்தவர் ஆவார். மேலும் அவரது நெருங்கிய ஆர்வார்டு வான்காணக நண்பரும் ஆவார்.[2]

இவர் 1932 இல் ஏற்பட்ட படகு நேர்ச்சியில் இறந்தார். அதே ஆண்டில் சேப்ளே-அமெசு அட்டவணை வெளியிடப்பட்ட்து.[3] இவர் ஆர்லிங்டன் தேசியக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[4]

வாழ்க்கை[தொகு]

அமெசுவின் தந்தையார் டி. எல். அமெசு ஆவார். இவர அமெரிக்கப் படைத்துறையில் தளபதியாக (Colonel) இருந்தவர். அமெசு வாசர் கல்லூரியில் 1922 வரை படித்தார். பின்னர், இவர் இராட்கிளிப் கல்லூரியில் அப்போதுதான் உருவாக்கப்பட்ட வானியல் துறையில் சேர்ந்து படித்தார். அமெசு 1924 இல் வானியலில் இராட்கிளிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆனார்.[5] முதலில் இவர் இதழியலாளராகத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்பகுதியில் வேளையேதும் இல்லையென அறிந்ததும் ஆர்வார்டு கல்லூரி வான்காணகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். இவர் இப்பணியில் தன் இறப்பு வரை அங்கேயே தொடர்ந்தார்.[1] இவர் கோமா விர்கோ விண்மீன்குழுக்களில் இருந்த பால்வெளிகளை அட்டவணைப்படுத்தும் பணியைச் செய்துவந்தார். இவர் 1931 இல்; 2800 வான்பொருள்கள் அடங்கிய அட்டவணைப் பணியை முடித்தார். இப்பணி இவரை பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் வளிம ஒண்முகில், விண்மீன் கொத்துகள் பற்றிய 28 ஆம் ஆணையத்தில் உறுப்பினராக உதவியது.

இவர் 1932 ஜூன் 26 இல் சுக்குவாம் ஏரியில் விடுமுறையைக் கொண்டாட ஓடத்தில் நன்கு தெரிந்த நண்பர் ஒருவருடன் சென்றபோது அவ்வோடம் கவிழ்ந்தது. இவர் நீரில் மூழ்கியதாகக் கருதப்பட்டது. இவரது உடல் பத்து நாட்கள் கழித்து 1932 ஜூலை 5 இல் தேடி எடுக்கப்பட்டது.[1] இவர் தன் 32 ஆம் அகவையில் இறந்தார்.

ஆர்வார்டில் ஆராய்ச்சி[தொகு]

ஆர்லோ சேப்ளே 1921 இல் ஆர்வார்டு கல்லூரி வான்காணக இயக்குநர் ஆனார். இவர் அமெசுவைத் தன் உதவியாளராகப் பணியில் அமர்த்திக்கொண்டார்.[2] அமெசு சேப்ளேவின் முதல் பட்டதாரி மாணவர் ஆவார். அமெசு தனது பட்டதாரி மாணவர்களை மேற்பார்வையிடலானார்.[6] ஆர்வார்டில் இவரது தொடக்க காலப் பணி புதிய பொதுப் பட்டியல் (பு பொ ப/ஐசி - NGC/IC) வான்பொருள்களை இனங்காண்பதாகும். இவரும் சேப்ளேவும் 1926 இல் 103 பு பொ ப பால்வெளிகளின் உருவளவு, நிறம், விட்டம் சார்ந்த பல கட்டுரைகளை வெளியிட்டனர்.[7] அமெசு 1930 இல் கோமா-விர்கோ குழு அடங்கலாக 2778 வளிம ஒண்முகில்களின் அட்டவணையை வெளியிட்டார். இதில் 214 புபொப வான்பொருள்களும் 342 ஐசி வான்பொருள்களும் விர்கோ கொத்துப் பகுதியில் அமைந்திருந்தன.[8]

சேப்ளே-அமெசு அட்டவணை[தொகு]

இவர் ஆர்வார்டில் பணிபுரிந்தபோது இவரும் சேப்ளேவும் இணைந்து அமெசு சேப்ளே அட்டவணையை உருவாக்கினர். இந்த அட்டவணை 13 பருமையை விடக் கூடுதலான பொலிவுள்ள பால்வெளிகளைப் பட்டியல் இட்டது. இவர்களின் 1250 பால்வெளிகளின் நோக்கீடுகளில் இருந்து, நமது பால்வழியின் வடமுனையில் விண்மீன் கொத்தமைவு தென்முனையை விட அமைதலுக்கான சான்றைக் கண்டறிந்தனர்.[9] இந்த முடிவுகள் சமக்கிடப்பியல் கருதல்நிலையில் இருந்து விலகி அமைந்தமையால் அதாவது, பரவலில் அமையும் பொது சீரிலாமை கண்டுபிடிக்கப்பட்டதால் மிகவும் சிறப்பனவையாகும்.[10]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Research Astronomer Lost by Drowning. In: Popular astronomy, Vol. 40, August/September 1932, S. 448–449. (online)
  2. 2.0 2.1 Barbara L. Welther: Adelaide Ames and the Shapley-Ames Catalogue. (Abstract) In: Bulletin of the American Astronomical Society. Vol. 22, 1990, S. 841. (online)
  3. Vera C. Rubin (1997). Bright Galaxies, Dark Matters. Springer. பக். 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-56396-231-8. https://books.google.com/books?id=OVBUt6yrMtAC&pg=PA89. 
  4. Department of Veteran Affairs பரணிடப்பட்டது 2019-06-01 at the வந்தவழி இயந்திரம் shows "AMES, ADELAIDE, D/O THALES L DATE OF DEATH: 06/26/1932 BURIED AT: SECTION EAST SITE 3488 C L ARLINGTON NATIONAL CEMETERY". It is a flat marker in front of her parents' tombstone, easily missed. See: http://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=46999806
  5. Cecilia Payne-Gaposchkin (21 March 1996). Cecilia Payne-Gaposchkin: An Autobiography and Other Recollections. Cambridge University Press. பக். 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-48390-2. https://books.google.com/books?id=LYh6hZaMqZcC&pg=PA30. 
  6. Sobel, Dava (2016). The Glass Universe: How the Ladies of the Harvard Observatory Took the Measure of the Stars. New York: Viking. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0670016952. https://archive.org/details/glassuniversehow0000sobe. 
  7. Nirmala Prakash (2013). Dark Matter, Neutrinos, and Our Solar System. World Scientific. பக். 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-4304-53-5. https://books.google.com/books?id=yD3vsVcx81IC&pg=PA6. 
  8. Steinicke. Observing and Cataloguing Nebulae and Star Clusters. Cambridge University Press. பக். 467. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-139-49010-8. https://books.google.com/books?id=wyWjVWYWoO8C&pg=PA467. 
  9. Steven J. Dick (31 August 2013). Discovery and Classification in Astronomy: Controversy and Consensus. Cambridge University Press. பக். 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-107-03361-0. https://books.google.com/books?id=IT8oAAAAQBAJ&pg=PA159. 
  10. "Adelaide Ames". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிலைடே_அமெசு&oldid=3812467" இலிருந்து மீள்விக்கப்பட்டது