அடிரோன்டாக் மலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடிரோன்டாக் மலைகள்
Adirondacks in May 2008.jpg
வைட்ஃபேசு மலையின் மேலிருந்து அடிரோன்டாக் மலைகளின் காட்சி
உயர்ந்த இடம்
Peakமார்சி சிகரம்
உயரம்5,344 ft (1,629 m)
ஆள்கூறு44°06′45″N 73°55′26″W / 44.11250°N 73.92389°W / 44.11250; -73.92389ஆள்கூறுகள்: 44°06′45″N 73°55′26″W / 44.11250°N 73.92389°W / 44.11250; -73.92389
புவியியல்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/NortheastAppalachiansMap.jpg" does not exist.
Countryஐக்கிய அமெரிக்கா
மாநிலம்நியூயார்க்
நிலவியல்
மலை பிறப்புகிரென்வில் முறை
பாறையின் வயதுடோனியக் காலம்

அடிரோன்டாக் மலைகள் (Adirondack Mountains, /ædɪˈrɒndæk/) அமெரிக்க நாட்டின் வடகிழக்கு நியூயார்க் மாநிலத்தில் உருவாகியுள்ள திண்மப்பாறைத் தொகுதி ஆகும். இதன் எல்லைகளும் அடிரோன்டாக் பூங்காவின் எல்லைகளும் ஒன்றே. இந்த மலை ஓர் வட்டமான குவிமாடமாக உருவாகியுள்ளது; இந்த வட்டத்தின் விட்டம் ஏறத்தாழ 160 மைல்கள் (260 கிமீ) மற்றும் உயரம் ஏறத்தாழ 1 மைல் (1,600 மீ). தற்போதைய மலைத்தோற்றத்திற்கு உறைபனிப்பரவலே காரணமாகும்.

வரலாறு[தொகு]

அடிரோன்டாக் மலைகளின் 1876ஆம் ஆண்டு நிலப்படம்; இதிலுள்ள பல சிகரங்கள், ஏரிகள், இடங்களின் பெயர்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை.

முதன்முதலாக 1742ஆம் ஆண்டில் இங்கு வந்திருந்த பிரான்சிய இறையியலாளர் யோசப்பு-பிரான்சுவா லஃபிட்டோ இதனை ரோன்டாக்சு எனக் குறிப்பிட்டுள்ளார்; இதற்கான பொருளாக மரந் தின்னிகள் என வரையறுத்திருந்தார். மோஹோக் மொழியில் முள்ளம்பன்றியை அடிரோன்டாக் என்கின்றனர். இது மரப்பட்டைகளை உண்ணக்கூடும். மோஹோக் மொழிக்கு வரிவடிவம் எதுவும் இல்லாததால் ஐரோப்பியர்கள் வெவ்வேறாக உச்சரிக்கத் தொடங்கினர். 1761இல் வரையப்பட்ட ஆங்கில நிலப்படமொன்றில் இது மான் வேட்டை நாடு எனவும் 1837இல் எபனேசர் எம்மான்சு இம்மலைகளை அடிரோன்டாக்சு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.[1]

இப்பகுதிக்கு கி.மு 10,000க்கு முன்பே தொல்குடி அமெரிக்கர்கள் வந்துள்ளனர். அல்கோங்குவைன் மக்களும் மோஹோக் நாடும் அடிரோன்டாக் மலைகளை வேட்டையாடவும் பயணிக்கவும் பயன்படுத்தினரே தவிர இங்கு குடியேறவில்லை. ஐரோப்பிய குடியேற்றம் 1609இல் தற்போது டைகொண்டெரோகா எனப்படும் இடத்திற்கு சாமுவல் டெ சாம்ப்ளேன் வந்தபிறகு துவங்கியது. 1642இல் இயேசு சபை இறையியலாளர் ஐசாக் ஜோக்சு இங்கு வந்துள்ளார்.[2]

1664இல் புதிய நெதர்லாந்து இங்கிலாந்து முடியாட்சிக்கு கையளிக்கப்பட்டபோது இப்பகுதி ஆங்கிலேயர் வசம் வந்தது. புரட்சிப் போருக்குப் பின்னர் இந்த நிலப்பகுதி நியூயார்க் மாநில மக்களுக்கு வழங்கப்பட்டது. போர்க் கடன்களை அடைக்க புதிய அரசு கிட்டத்தட்ட அனைத்து பொதுவிடங்களையும், கிட்டத்தட்ட 7 மில்லியன் ஏக்கராக்கள், மிகவும் குறைந்த விலைக்கு, ஏக்கருக்கு பென்னி கணக்கில், விற்றது. மரவெட்டிகள் உள்பகுதிகளுக்கு ்எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வரவேற்கப்பட்டனர்; [3] இதனால் பெரும் வனவழிப்பு நிகழ்ந்தேறியது.

1989இல் யுனெசுக்கோ அடிரோன்டாக் நிலப்பகுதியின் பகுதிபாகத்தை சாம்ப்ளேன்-அடிரோன்டாக் பல்லுயிர்க்கோவை உய்வகமாக அறிவித்துள்ளது.[4]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cherniak, D. J. "Ebenezer Emmons (1799–1863)". Rensselaer Polytechnic Institute. மே 27, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 23, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. Sulavik, Stephen B. (2007). Adirondack : of Indians and mountains, 1535–1838. Fleischmanns, N.Y.: Purple Mountain Press. பக். 21–51. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1930098794. 
  3. "History of the Adirondack Park". New York State Adirondack Park Agency. June 23, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "UNESCO – MAB Biosphere Reserves Directory". www.unesco.org. 2016-05-21 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிரோன்டாக்_மலைகள்&oldid=3540763" இருந்து மீள்விக்கப்பட்டது