அடிமை உடைமை அரசு
Appearance
வர்க்கங்களாக சமுதாயம் பிரிபட்டிருந்த போது ஆளும் வர்க்கம் பெற்றுள்ள சலுகைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு தனி இயந்திரம் தேவையாய் இருந்தது சமுதாயத்தில் உழைப்பாளி மக்களை ஒடுக்குவதற்காக வந்த, அமைந்த இயந்திரம் அடிமை உடைமை அரசு எனப்பட்டது. [1]
அரசின் தன்மை
[தொகு]ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான ஒரு இயந்திரமாகவே அரசு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அடிமை உடைமையாளர்களின் அரசாக இருந்து அடிமைகளை அடக்கி வைத்திருக்க பயன்பட்டதாகவும், [2] அடிமைகளைச் சுரண்டும் அதிகாரத்தை அடிமை உடைமையாளர்களுக்கு இது வழங்கியதாகவும் அறியப்படுகிறது.