அடிமைத்தனத்தின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடிமை முறையின் வரலாறு (history of slavery) என்பது பழங்காலந்தொட்டு தற்காலம் வரை ஒரு நாட்டின் தேசியத்தில், கலாச்சாரத்தில் மற்றும் மதத்தில் கூட கால் பதித்திருக்கிறது, இருந்தாலும் இந்த அடிமை முறை உலகின் பல காலகட்டங்களில் சமூக நிலையிலும் பொருளாதார ரீதியிலும் மற்றும் சட்ட ரீதியாகவும் நிறைய மாற்றங்கைளக் கொண்டுள்ளது.[1]

அடிமை முறை எப்போது தோன்றியது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கும் போது, பழமையான ஆவணமான மெசொப்பொத்தேமியாவின் ஹமுராபி சட்டத்தொகுப்பு (கி.மு 1860) அடிமைமுறை பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், முறைப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகவும் இருந்தது என்று கூறுகிறது.[2]

அடிமை முறை என்பது காட்டுவாசி மக்களிடையே காணப்படவில்லை ஏனென்றால் இம்முறை சமுதாய அடுக்கமைவுகளில்தான் வளர்ச்சி அடைந்தது.[3][4] கிமு 3500 ஆண்டு பழமையான மெசப்பத்தோமியாவின் சுமேரிய நாகரீகம் தான் முதன்முதலில் அடிமை முறை பற்றிக் கூறுகிறது. இந்நாகரீகம் தான் மற்ற நாகரீகங்களுக்கெல்லாம் முந்தையது. பைசாந்தியப் பேரரசுக்கும் உதுமானியத் துருக்கியருக்கும் இடையே நடைபெற்ற போரின்போது நிறைய கிறித்தவர்கள் அடிமைகளாக்கப் பட்டனர்.

ஐரோப்பாவில் அடிமை முறை என்பது இருண்ட காலம் தொடங்கி இடைக்காலம் வரை பொதுமக்களிடையே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருந்தது. குறிப்பாக கிபி ]]1600]]க்கு பிறகு அத்திலாந்திக்கின் அடிமை வணிகத்தில் டச்சு, பிரெஞ்சு, எசுப்பானிய, போர்ச்சுக்கீசிய, ஆங்கிலேய, அராபிய மக்கள் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கப் பேரரசுகள் முக்கிய பங்கினை வகித்தார்கள்.

டேவிட் பி. போர்சைட் என்பார்[5] கூறுகிறார்: உண்மையைச் சொன்னால் 19 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் விருப்பத்திற்கு மாறாக பண்ணையடிமைகளாக்கப்பட்டனர். டென்மார்க், நார்வே நாடுகள்தான் முதன்முதலாக கிபி 1802-இல் அடிமை வணிகத்தைத் தடை செய்த ஐரோப்பிய நாடுகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Klein, Herbert S.; III, Ben Vinson (2007). African Slavery in Latin America and the Caribbean (2nd ). New York [etc.]: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0195189421. 
  2. "Mesopotamia: The Code of Hammurabi". 14 May 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. e.g. Prologue, "the shepherd of the oppressed and of the slaves" Code of Laws No. 307, "If any one buy from the son or the slave of another man".
  3. Smith, Eric Alden; Hill, Kim; Marlowe, Frank; Nolin, David; Wiessner, Polly; Gurven, Michael; Bowles, Samuel; Mulder, Monique Borgerhoff et al. (February 2010). "Wealth Transmission and Inequality Among Hunter-Gatherers". Current Anthropology 51 (1): 19–34. doi:10.1086/648530. பப்மெட்:21151711. 
  4. Wanzola, Hamba (30 November 2012). Rediscovering the Hidden World: The Changing Human Geography of Kongo. Xlibris Corporation. பக். 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1479751914. https://books.google.es/books?id=hLFGpdkpHKsC&pg=PT72. 
  5. "David P. Forsythe". The Globalist.