அடிமறிமண்டில ஆசிரியப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அடிமறிமண்டில ஆசிரியப்பா ஆசிரியப்பாவின் நான்கு வகைகளுள் ஒன்று. இவ்வகை ஆசிரியப்பாவில் நிலைமண்டில ஆசிரியப்பாப் போன்றே அனைத்து அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டமையும். இது தவிர பாடலில் எந்த அடியை எவ்விடத்தில் இட்டாலும் (வரிசை மாறினாலும்) பொருள் மாறாது.

எடுத்துக்காட்டு

மாறாக் காதலர் மலைமறந் தனரே
யாறாக் கட்பனி வரலா னாவே
ஏறா மென்தோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழியான் வாழு மாறே

மேற்கோள்கள்[தொகு]