அடிப்படைச் சான்றுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அடிப்படைச் சான்று இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முதல்நிலை தகவல் வளம் அல்லது அடிப்படைச் சான்றுகள் (primary sources) முதன்மைச் சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றன. இதனைச் சமகாலச் சான்று எனலாம்.

வரலாறு எழுதுவோர் முதன்மையான சான்றுகளின் அடிப்படையிலேயே எழுதுகின்றனர். முதன்மையான சான்று என்பது வரலாறு எழுதப்படும் காலத்திய சான்று. தொல்பொருள், கல்வெட்டு, நாணயம், இலக்கியம், சமகாலத்தவர் குறிப்பு போன்றவை இந்த முதன்மையான சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றனர். எழுதப்படும் செய்தி பற்றி முன்பே ஆய்வாளர்கள் தந்துள்ள சான்றுகள் சார்புச் சான்றுகள் (secondary sources) எனக் கொள்ளப்படுகின்றன. இவை பிற்காலச் சான்றுகள்.

சங்ககால வரலாறு எழுதுவோர் சங்கப் பாடல்களிலிருந்தும் அக்காலக் கல்வெட்டு போன்றவற்றிலிருந்தும் சான்று தந்தால் அது அடிப்படைச் சான்று. தொடர்புள்ள செய்திகளை ஆய்வாளர்களின் நூல்களிலிருந்து சான்று தந்தால் அது சார்புச்சான்று. முதல்நிலைச் சான்று, பின்னிலைச் சான்று என்பன இவற்றின் விளக்கங்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிப்படைச்_சான்றுகள்&oldid=2266797" இருந்து மீள்விக்கப்பட்டது