அடினாய்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமைவிடம்[தொகு]

மூக்கைச்சார்ந்த தொண்டைப் பகுதியில் உள்ள உள்நாக்கைப் போல் (டான்சில்) பல அடுக்கு திசுக்களைக் கொண்டவை. இங்கே காணப்படும் உட்சவ்வு, பொய் அரும்பு, தோல்மேல் தூண்கள் திசுக்களால் ஆனவை. இவை காதுக் குழாயைச் சுற்றிலும் அமைந்திருக்கும். இவை இளம் வயதில் காணப்படும். வயதாக வயதாக சுருங்கி விடும்.

செயல்பாடுகள்[தொகு]

நோய் எதிரிப்புத் திறனை மனிதனுக்குத் தருவதில் இவை முதன்மையான இடம் பெறுகின்றன. இவை உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றோடு தொடர்பு கொள்கின்றன. இவற்றின் மேலுள்ள மேடான இணையான வரப்புகள் காற்றுள்ள நுண்ணுயிர்களை வடிகட்ட உதவுகின்றன. மூக்கைச் சார்ந்த தொண்டையின் நுண்மயிர் போன்ற உறுப்புகள் தங்களின் அசைவினால் மூக்கின் உட்சவ்வின் மேலுள்ள வடிநீரை தொண்டைக்குச் செலுத்துகின்றன. இவ்வாறு செய்யும் போது காற்றிலும், மூக்கிலும் உள்ள வழிகாட்டிய நுண்ணுயிர்கள் அடினாய்டுகளை அடைகின்றன. இந்த அடிநாய்டுகள் நோய் எதிர்ப்பு பொருட்களை (அன்டிபையோட்டிக் ) தயாரித்து இரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்கின்றன.

[1]
  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி -1 பக்கம் :285-286
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடினாய்டுகள்&oldid=2335334" இருந்து மீள்விக்கப்பட்டது