உள்ளடக்கத்துக்குச் செல்

அடிநிலை ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர்ம ஈலியம் இயக்க ஆற்றலைத் தக்கவைக்கிறது, மேலும் அது சுழி-நிலை ஆற்றலின் காரணமாக உறைவதில்லை. அதன் லாம்ப்டா புள்ளிக்கு கீழே குளிர்விக்கப்படும் போது, அது மீப்பாய்மப் பண்புகளை வெளிப்படுத்துகிறது.

அடிநிலை ஆற்றல் அல்லது சுழி-நிலை ஆற்றல் (Zero-point energy, ZPE) என்பது ஒரு துளிம எந்திரவியல் அமைப்பு பெறக்கூடிய மிகக்குறைந்த ஆற்றலின் அளவு; துளிம சுழிநிலை ஆற்றல் என்பது ஒரு துளிம எந்திரவியல் அமைப்பின் நிலையில் ஐசன்பர்க் நிலையின்மைத் தத்துவத்தின்படி ஏற்படும் தவிர்க்கவியலாத மாறுபாடுகளினால் உருவாகும் ஆற்றல்[1]; இது மிகவும் அடிப்படையான ஒரு துளிம நிகழ்வாகும். தனிவெப்பநிலைக் கீழ்வரம்பில், அதாவது 0 K வெப்பநிலையில், அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் பெற்றிருக்கும் ஆற்றலாகும். இந்த வெப்பநிலையில் அவைகள் இயக்கம் இன்றி இருப்பதால் அவைகளின் இயக்க ஆற்றல் சுழியமாகும்.

செய்முறை நிறுவல்[தொகு]

லேசர் சீரொளிக் குளிர்விப்பின் மூலம் ஒரு துளிம எந்திரவியல் அலையியற்றியை அதன் அடிநிலை ஆற்றலை அடையும்படி செய்து அதன் நிலையில் ஏற்படும் துளிம மாறுபாடுகளைக் கண்டுபிடித்துள்ளனர்; இதில் அயனிப் பிடிப்பி இயற்பியலில் உள்ள நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது[1]

துளிம சீரிசை அலையியற்றி[தொகு]

ஈரணு மூலக்கூறின் அலைவுகள் இரு நிறைகளை ஓர் சுருளின் மூலம் இணைத்த அமைப்பின் அலைவுகளைப் போல இருப்பினும், அதன் நிலையாற்றல் குவைய ஆற்றல் மட்டங்களாக இருக்கின்றன[2].

துளிம சீரிசை அலையியற்றியின் ஆற்றல் மட்டங்களுக்கான (En) வாய்ப்பாடு:

(அல்லது)
இங்கு n = 0 என்பது சுழிநிலை ஆற்றலைக் குறிக்கும்; மேலும், h என்பது பிளாங்க் மாறிலியையும் என்பது அதிர்வெண்ணையும் என்பது கோண அதிர்வெண்ணையும் குறிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Aashish Clerk (2012). Seeing the “Quantum” in Quantum Zero-Point Fluctuations. [1]
  2. "Quantum Harmonic Oscillator". பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிநிலை_ஆற்றல்&oldid=3379456" இலிருந்து மீள்விக்கப்பட்டது