அடா ஒகஸ்ரா லவ்லேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடா ஒகஸ்ரா லவ்லேஸ்

அடா ஒகஸ்ரா லவ்லேஸ் என்பவர் முதலாவது கணனி நிகழ்ச்சி நிரலர் எனச்சிறப்பிக்கப்படுகிறார். 1815.12.10 பிறந்த இவர் கணனியின் தந்தையான சார்ஸ் பபேஜ் அவர்களின் நெருங்கிய நண்பி ஆவார். பபேஜ் அவர்கள் உருவாக்கிய பகுப்புப்பொறி(Analytical Engine-1837)க்கு உரிய நிகழ்ச்சி நிரலை அடா எழுதியமையினால் அவர் உலகின் முதலாவது நிகழ்ச்சி நிரலர் எனப்போற்றப்படுகிறார். அடா ஒகஸ்ரா லவ்லேஸ் ஆங்கில கவிஞர் லார்ட் ஜார்ஜ் கோர்டன் பைரன் என்பவரின் சட்டபூர்வமான குழந்தை மட்டுமே.தாய் லேடி அன்னே இசபெல்லா மில்பாங்க் பைரன் ஆவார்.அடா ஒகஸ்ரா லவ்லேஸ் 1852 நவம்பர் 27 அன்று இறைவனடிசேர்ந்தார்.

படிமம்:Ada Augusta Lovelace.jpg#file

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடா_ஒகஸ்ரா_லவ்லேஸ்&oldid=2596876" இலிருந்து மீள்விக்கப்பட்டது