அடால் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அடால் பூங்கா (Atal Park) இந்தியாவிலுள்ள சத்தீசுகர் மாநிலத்தின் புதிய தலைநகரமான நயா இராய்ப்பூரில் அமைந்துள்ள ஒரு பொது நகர்ப்புற பூங்காவாகும். முன்னதாக இப்பூங்கா மத்தியப் பூங்கா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. [1] நயா இராய்ப்பூரின் மத்திய அவென்யூ சாலையில் 35 ஏக்கர் பரப்பளவில் அடால் பூங்கா அமைந்துள்ளது. 120 நபர்கள் அமர்ந்து உணவு அருந்தும் வசதி கொண்ட உணவு விடுதி, 1500 நபர்கள் அமர்ந்து பார்க்கக் கூடிய வட்டரங்கு, சிறு சந்தைகள், யோகா பூங்கா மற்றும் பூங்காவிற்கு தெந்திசையில் ஒரு செயற்கை ஏரி போன்றவை இடம்பெற்றுள்ளன. வடக்குப் பகுதியில் ஒரு நடையோட்டப் பாதை, பல்கூட்டு திரையரங்கம், உணவு விடுதி 45 ஊஞ்சல்களுடன் குழந்தைகள் விளையாடும் பகுதி மற்றும் ஒரு பல்நோக்கு மையம் போன்றவை உள்ளன.

மாநிலத்தின் கலை மற்றும் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் சிறப்பு அடால் பூங்காவிற்கு உண்டு. நயா இராய்ப்பூர் மேம்பாட்டு நிறுவனம் சுமார் 70 கோடி ரூபாய் செலவு செய்து இப்பூங்காவை உருவாக்கியுள்ளது. [2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடால்_பூங்கா&oldid=3069471" இருந்து மீள்விக்கப்பட்டது