அடர் வனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய நாட்டிலுள்ள தியோமன் தீவு

அடர் வனம் என்பது அடர்த்தியாக வளர்ந்த பசுமையான மரங்களைக் கொண்டுள்ள காடு அல்லது வனம் ஆகும். கடந்த சில நூற்றாண்டுகளாக ஜங்கிள் (jungle) என்ற ஆங்கிலப் பதத்தின் பயன்பாடு மிகவும் வேறுபட்டுள்ளது. மேற்கத்திய இலக்கியங்களில் இந்த அடர் வனத்திற்குரிய ஆங்கிலப் பதமான “ஜங்கிள்” (jungle)  நாகரிகத்தின் கட்டுப்பாடில்லாத குறைந்த நாகரீக வளர்ச்சியடைந்த வெளிகளை குறிக்கப் பயன்பட்டது. 

சொற்பிறப்பியல்[தொகு]

ஜங்கிள் என்ற சொல்லானது சமஸ்கிருத வார்த்தை ஜங்களா (சமக்கிருதம்: जङ्गल) என்பதிலிருந்து தோன்றியதாகும். இதன் பொருள் விளைவிக்கப்படாத நிலம் என்பதாகும். இருந்த போதிலும் வறண்ட நிலப்பகுதியைக் குறிப்பதற்கும் இச்சொல் பயன்பட்டிருக்கிறது. ஆங்கிலோ - இந்தியர் ஒருவர் இச்சொல்லுக்கான உட்பொருளாக "சிக்கலான புதர்" எனக் கூறுகிறார். [1] இந்தி மொழியில் உள்ள  இதை ஒத்த  சொல் காடுகளைக் குறிப்பதாக வேறு சிலரும் முன் வைக்கின்றனர்..[2] இந்தச் சொல் பரவலாக இந்தியத் துணைக்கண்டத்தின் பல மொழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடர்_வனம்&oldid=3792350" இலிருந்து மீள்விக்கப்பட்டது