அஞ்சு சோசப்
| அஞ்சு சோசப் | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | காஞ்சிரப்பள்ளி, கேரளா, இந்தியா |
| தொழில்(கள்) | பின்னணிப் பாடகர் |
| இசைக்கருவி(கள்) | பியானோ |
| இசைத்துறையில் | 2007 – தற்போது |
அஞ்சு ஜோசப் (Anju Joseph) என்பவர் ஓர் இந்திய பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாள திரைத்துறையை சார்ந்தவர் ஆவார். 2011 இல் மலையாளத் திரைப்படமான டாக்டர் லவ் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் [1]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்
[தொகு]அஞ்சு சோசப் காஞ்சிரப்பள்ளியில் உள்ள செயின்ட் சோசப் பப்ளிக் பள்ளியிலும், செயின்ட் அந்தோணி பப்ளிக் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார் மேலும் எர்ணாகுளத்தில் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தார். கொச்சி மகாராசா கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[2]
அஞ்சு, ஏசியாநெட் ஐடியா ஸ்டார் சிங்கர் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்,[3] மேலும் அவர் கந்தர்வ சங்கீதம் நிகழ்ச்சியின் மூன்றாவது இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
ரியாலிட்டி ஷோ இயக்குநராக இருந்த அனூப் ஜானை அஞ்சு திருமணம் செய்து கொண்டார். பின்னர் பிரிந்தனர். அவர் இப்போது ஆதித்யா பரமேசுவரனை மணந்துள்ளார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ M, Athira (2017-06-22). "Experiments with music" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/entertainment/music/anju-joseph-on-her-a-cappella-band-and-her-journey-with-music/article19123800.ece.
- ↑ "വിവാഹശേഷം മുസ്ലിം ആയോ? അഞ്ജു മനസ്സ് തുറക്കുന്നു".
- ↑ Manmadhan, Prema (4 August 2010). "The new singing stars". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/The-new-singing-stars/article16119649.ece.
- ↑ "Malayalam singer Anju Joseph is married, shares wedding photo" (in en). India Today. 30 November 2024. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/malayalam-singer-anju-joseph-wedding-aditya-photo-2642858-2024-11-30.