உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சுலா சிங் மகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சுலா சிங் மகர்
தேசியம்இந்தியர்
பட்டம்அரசியல்வாதி
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

 

அஞ்சுலா சிங் மகர் (Anjula Singh Mahaur)(பிறப்பு 1970) உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஹத்ராசு மாவட்டத்தில் பட்டியல் சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட ஹாத்ராஸ் சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18ஆவது உத்தரப் பிரதேசச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2022 உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

சிங் ஆக்ரா படைப்பிரிவு பகுதியினைச் சேர்ந்தவர். ஆக்ராவின் ஆக்ரா பல்கலைக்கழகத்துடன் இணைந்த டி. எஸ். கல்லூரி அலிகாரில் 1991-ஆம் ஆண்டில் தனது முதுகலைச் சட்டப் படிப்பினை முடித்தார். இவர் அரசு ஊழியரான சுதிர் குமார் மகாரை மணந்தார்.[1]

அரசியல்

[தொகு]

2022 உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஹாத்ராஸ் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சிங் வெற்றி பெற்றார். இவர் 1,54,655 வாக்குகளைப் பெற்று பகுஜன் சமாஜ் கட்சியின் சஞ்சீவ் குமாரை 1,00,856 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Anjula Singh Mahaur(Bharatiya Janata Party(BJP)):Constituency- HATHRAS (SC)(HATHRAS) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2023-01-04.
  2. "Anjula Singh Mahaur: undefined Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). Retrieved 2023-01-04.
  3. Goshwami, Sarmistha (2023-01-04). "UP MLA List 2023 Winner MLAs in UP District & Party Wise". DMER Haryana: Recruitment, News, Admit card, result (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-01-04.
  4. ANI (2022-03-10). "BJP sails through Opposition clamour over Hathras incident, wins Assembly seat by over one lakh votes". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-06-19.
  5. "Hathras Sc Assembly (Vidhan Sabha) Election Results 2022: विधानसभा मतदारसंघ 2022, Winner, Runner-Up, Winning Party". Loksatta (in மராத்தி). Retrieved 2024-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சுலா_சிங்_மகர்&oldid=4375915" இலிருந்து மீள்விக்கப்பட்டது