அஞ்சும் அசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சும் அசன்
Anjum Hasan
பிறப்பு1972
சில்லாங், மேகாலயா, இந்தியா
தொழில்புத்தக ஆசிரியர், கேரவன் பத்திரிகை
கல்வி நிலையம்வடகிழக்கு மலை பல்கலைக்கழகம்
இணையதளம்
www.anjumhasan.com

அஞ்சும் அசன் (Anjum Hasan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாவலாசிரியர் ஆவார். சிறுகதை எழுத்தாளர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் என பன்முகங்களுடன் இவர் இயங்கி வருகிறார். மேகாலயா மாநிலம் சில்லாங்கில் 1972 ஆம் ஆண்டு அஞ்சும் அசன் பிறந்தார். வடகிழக்கு மலை பல்கலைக்கழகத்தில் தத்துவப் பாடத்தில் பட்டம் பெற்றார். [1] சில்லாங்கைச் சேர்ந்த இவர் தற்போது இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரத்தில் வசிக்கிறார். கேரவன் பத்திரிகையின் ஆசிரியராக உள்ள இவர் இந்தியக் கலை அறக்கட்டளை என்ற அமைப்பிலும் பணிபுரிகிறார்.

தொழில்[தொகு]

அஞ்சும் அசனின் முதல் புத்தகம் கவிதைகளின் தொகுப்பாக இருந்தது மலை மேல் தெரு என்ற இக்கவிதை நூலை 2006 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ளது.[2] [3] இப் புத்தகம் நார்வேயியன் மொழியில் ஒரு மலையின் உச்சியில் தெரு என வெளியிடப்பட்டது.

2011 ஆம் ஆண்டு சூரியன்சு குப்தாசு இதை மொழிபெயர்த்தார்.[4]

இவரது முதல் நாவலான லூனாட்டிக் இன் மை எட்டு என்ற நூலை 2007 ஆம் ஆண்டு பெண்ணியப் பதிப்பகமான சூபான் பெங்குவினுடன் இணைந்து வெளியிட்டது. கிராசுவேர்டு புத்தக விருதுக்கு இந்நூல் 2007 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது. [5] 1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் சில்லாங்கில் உருவான இது, மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் கதைகளை ஒன்றிணைக்கிறது. மேகாலய எழுத்தாளர் சித்தார்த்த தேப் இந்நூலை அடிக்கடி படிக்கத்தூண்டும் பாடல்' என விவரித்தார். [6]

இரண்டாவது நாவலான நேட்டி, நேட்டி 2009 ஆம் ஆண்டு ரோலி புக்சு நிறுவனம் வெளியிட்டது. 2008 ஆம் ஆண்டுக்கான மேன் ஆசிய இலக்கியப் பரிசுக்கான பட்டியலில் இப்புத்தகம் இடம்பெற்றது. 2010 ஆம் ஆண்டில் தி இந்து சிறந்த புனைகதை விருதிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சில்லாங்கைச் சேர்ந்த 25 வயதான சோஃபி தாசின் கனவு நிறைந்த கதாபாத்திரத்தின் கதையை பெங்களூரில் நிறைவேற்றிக் கொள்ள தேடுவதாக நூல் அமைந்திருந்தது. தைரியமான புதிய இந்தியாவின் நடுத்தர வர்க்க இளைஞர்களின் வழக்கத்திற்கு மாறாக விடுவிக்கப்பட்ட மற்றும் எதிர்பாராத விதமாக இழந்த ஒரு பச்சாதாபமான ஓவியமே இந்த நாவல் என்று விவரிக்கப்பட்டது. [7]

2012 ஆம் ஆண்டு பெங்குவின் - வைக்கிங் இணைந்து வெளியிட்ட இவரது சிறுகதைத் தொகுப்பு, டிபிக்கல்ட்டு பிளசர்சு தி இந்து இலக்கியப் பரிசுக்கும் [8] கிராசுவேர்டு புத்தக விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது. [9] லூனாட்டிக் இன் மை எட்டு, நேட்டி, நேட்டி, டிபிக்கல்ட்டு பிளசர்சு நூல்கள் அனைத்தும் ஆத்திரேலியாவில் பிராசு மங்கி புக்சு நிறுவனம் வெளியிட்டது. [10]

அஞ்சும் அசனின் மூன்றாவது நாவலான தி காசுமோபோலிடன்சு 2015 ஆம் ஆண்டு பெங்குயின் புக்சு இந்தியா நிறுவனமும் 2016 ஆம் ஆண்டில் பிரியோ புக்சு நிறுவனம் ஆத்திரேலியாவிலும் வெளியிட்டன.[11] [12] [13] அஞ்சும் அசனின் இப்புதிய புத்தகமானது, சிந்தனைகளின் நாவல், அனுமானங்களை கேள்வி கேட்கும் நாவல், வீட்டிற்கு வெளியே பெண்ணைக் கொண்டாடும் நாவல் போன்ற அரிய சம்பவங்கள் நிறைந்த நாவல் என்று விமர்சிக்கப்பட்டது. [14]

இவர் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச வெளியீடுகளுக்கும் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளையும் வழங்கியுள்ளார். [15] தற்போது தி கேரவனின் புத்தக ஆசிரியராக உள்ளார். [16]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anjum Hasan". www.literaturfestival.com. Archived from the original on 2021-04-07. பார்க்கப்பட்ட நாள் 2021-04-07.
  2. Review of Street on the Hill in The Hindu Literary Review
  3. "Review of Street on the Hill in Tehelka" (PDF). Archived from the original (PDF) on 12 October 2016.
  4. "Gata på toppen av en ås av Anjum Hasan".
  5. "Lunatic in my head on Crossword Book Award shortlist".
  6. "Jabberwock: Anjum Hasan, Shillong and Lunatic in my Head". 23 December 2007.
  7. "Review of Neti Neti in Outlook".
  8. Staff writer (February 17, 2013). "The Hindu Literary Prize goes to Jerry Pinto". தி இந்து. http://www.thehindu.com/books/the-hindu-literary-prize-goes-to-jerry-pinto/article4425328.ece. 
  9. "Difficult Pleasures on Crossword shortlist".
  10. "Review of Australian edition of Difficult Pleasures".
  11. "Brio Books".
  12. "India Express Review of The Cosmopolitans". 15 August 2015.
  13. "Mint Lounge Review of The Cosmopolitans". 24 August 2015.
  14. "India Today review of The Cosmopolitans".
  15. Anjum Hasan's website
  16. The Caravan

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சும்_அசன்&oldid=3315356" இலிருந்து மீள்விக்கப்பட்டது