அஞ்சல்தலைத் தாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1884ல் சென். கிறிசுத்தோபரில் இருந்து வெளியிடப்பட்ட அஞ்சல்தலைத் தாள்.

அஞ்சல்தலைத் தாள் (Sheet of stamps) என்பது, குறித்த அளவுள்ள தாளில் அச்சிடப்பட்ட ஒரு அலகு அஞ்சல்தலைத் தொகுதியைக் குறிக்கும். தாளின் அளவு, அச்சுத் தகட்டின் அளவில் தங்கியுள்ளது. ஒரு தாளில் பல அஞ்சல்தலைகள் இருக்கும்போது அவை கிடை, நிலைக்குத்து வரிசைகளில் ஒரு அட்டவணைபோல் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்.[1] தனித்தனி அஞ்சல்தலைகளுக்கு இடையிலான இடைவெளிகள் ஒரே அளவுகளைக் கொண்டிருப்பதுடன், வெட்டுவதற்கோ, துளைகள் இடுவதற்கோ போதுமான இடவசதியைக் கொண்டிருக்கும்.

அளவும் வடிவமும்[தொகு]

தற்காலத்தில், அஞ்சல்தலைத் தாளே அச்சடிக்கும்போது அஞ்சல்தலைகளை ஒழுங்குபடுத்தும் பொதுவான வழியாகும். ஒரு தாளில் இருக்கக்கூடிய அஞ்சல்தலைகளின் எண்ணிக்கையும், அதன் வடிவமும் தனித்தனி அஞ்சல்தலைகளின் அளவிலும், வடிவத்திலும் தங்கியுள்ளது. சிறிய அஞ்சல்தலைகள் பொதுவாக நூறு அஞ்சல்தலைகளைக் கொண்ட தாள்களாக அச்சிடப்படுகின்றன. இருந்தாலும், பென்னி பிளாக்கும், பிற பதின்ம இசுட்டேர்லிங் நாணயமுறைக்கு முந்திய அஞ்சல்தலைத் தாள்கள் 240 அஞ்சல்தலைகளைக் கொண்டிருந்தன.[2] பெரிய அஞ்சல்தலைகளைப் பொறுத்தவரை ஒரு தாளுக்கு ஐம்பது, இருபத்தைந்து அல்லது இருபது அஞ்சல்தலைகள் அச்சிடப்படுவதுண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Glossary Of Philatelic Terms: S". Linn's Stamp News. Archived from the original on 2007-12-31. பார்க்கப்பட்ட நாள் 2008-03-03.
  2. Mackay, James., The Complete Guide to Stamps & Stamp Collection, Hermes House, London, 2007, p. 16
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சல்தலைத்_தாள்&oldid=3540823" இலிருந்து மீள்விக்கப்பட்டது