உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சலி பெகரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சலி பெகரா
Anjali Behera
உறுப்பினர், ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
2000-2014
முன்னையவர்மகேசுவர நாயக்கு
பின்னவர்சீமராணி நாயக்கு
தொகுதிஇந்தோல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 4, 1972 (1972-05-04) (அகவை 53)
அரசியல் கட்சிபிச்சூ சனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
சனதா தளம்

அஞ்சலி பெகரா (Anjali Behera) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1972 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பிச்சூ சனதா தளத்தின் ஒரு பணியாளராக ஒடிசா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஒடிசா சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். முதன்முதலில் 2004 ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2009 ஆம் ஆண்டிலும் 14 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு, நவீன் பட்நாயக்கின் மூன்றாவது அமைச்சரவையில் அஞ்சலி பெகரா முதல் முறையாக அமைச்சரானார். முதலில் மாநில நெசவுத் துறை அமைச்சராகவும், பின்னர் 2012 வரை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.[1][2][3]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

அஞ்சலி பெகரா 1972 மே 4 அன்று தேன்கனல் மாவட்டத்தில் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் திரிநாத் நாயக்கு என்பதாகும். அஞ்சலி பெகரா கலை பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். லட்சுமிதர் பெகராவை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அஞ்சலியின் தந்தை திரிநாத் நாயக்கு இந்தோல் சட்டமன்ற தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்றத்திற்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல்

[தொகு]

ஒடிசாவில் பிச்சூ சனதா தளம் உருவாக்கப்பட்ட பிறகு அஞ்சலி அக்கட்சியில் சேர்ந்தார். மேலும் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் இந்தோல் தொகுதியில் இருந்து பிச்சூ சனதா தளக் கட்சியின் பிரதிநிதியாகப் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று 12 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு பிச்சூ சனதா தள அரசாங்கம் வீழ்ச்சியடையும் வரை, அஞ்சலி சட்டமன்றத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.

2004 ஆம் ஆண்டு நடந்த அடுத்த தேர்தலிலும் அஞ்சலி மீண்டும் இந்தோல் சட்டமன்ற தொகுதியில் பிச்சூ சனதா தளத்தின் பிரதிநிதியாகப் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றி பெற்று 13 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 முதல் 2009 வரை இந்த சட்டமன்றத்தில் பணியாற்றினார்.

2009 ஆம் ஆண்டு நடந்த அடுத்த தேர்தலிலும் அஞ்சலி மீண்டும் இந்தோல் சட்டமன்ற தொகுதியில் பிச்சூ சனதா தளத்தின் பிரதிநிதியாகப் போட்டியிட்டார். தேர்தலில் 60291 வாக்குகளுடன் வெற்றி பெற்று 14 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 முதல் 2014 வரை இந்த சட்டமன்றத்தில் பணியாற்றினார்.

அஞ்சலி முதன்முதலில் 2009 ஆம் ஆண்டில் ஒடிசா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். நவீன் பட்நாயக்கின் மூன்றாவது அமைச்சரவையில் மே 22, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதியன்று நெசவு மற்றும் கைத்தறித் துறை இணை அமைச்சராகப் பணியாற்றத் தொடங்கினார். இந்த துறையில் 2011 மே 10 வரை பணியாற்றினார். பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றத் தொடங்கினார்.[4] 2012 ஆம் ஆண்டு வரை இப்பதவியில் தொடர்ந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Anjali Behera". ஒடிசாவின் சட்டமன்றம். Retrieved 12 October 2021.
  2. "Goons at CM house scared me: Anjali Behera". Rajaram Satapathy. The Times of India. 3 June 2012. Retrieved 12 October 2021.
  3. "Anjali Behera Joins Fray As Independent, Rebels Galore In BJD". Sambadenglish. 26 March 2014. Retrieved 12 October 2021.
  4. "Goons at CM house scared me: Anjali Behera - Times of India". The Times of India. Retrieved 2019-03-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலி_பெகரா&oldid=4375885" இலிருந்து மீள்விக்கப்பட்டது