அஞ்சலி பகவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Anjali Bhagwat
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்Anjali Ramakanta Vedpathak
தேசியம்Indian
பிறப்பு5 திசம்பர் 1969 (1969-12-05) (அகவை 54)
மும்பை, மகாராட்டிரம்
வசிப்பிடம்புனே, மகாராட்டிரம்
உயரம்5 ft 4 in
விளையாட்டு
விளையாட்டுகுறி பார்த்துச் சுடுதல்
தொழில்முறையானது1988
பதக்கத் தகவல்கள்
நாடு the  இந்தியா
International Career Statistics
தங்கப் பதக்கம் – முதலிடம் 31
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 23
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 7
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2002 Manchester Air Rifle (Individual)
தங்கப் பதக்கம் – முதலிடம் 2002 Manchester Air Rifle Team
தங்கப் பதக்கம் – முதலிடம் 2002 Manchester 3P (Individual)
தங்கப் பதக்கம் – முதலிடம் 2002 Manchester 3P Team
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2006 Melbourne 3P Team
Commonwealth Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 1999 Auckland Air Rifle (Individual)
தங்கப் பதக்கம் – முதலிடம் 1999 Auckland Air Rifle Team
தங்கப் பதக்கம் – முதலிடம் 1999 Auckland 3P(Individual)
தங்கப் பதக்கம் – முதலிடம் 2001 England Air Rifle (Individual)
தங்கப் பதக்கம் – முதலிடம் 2001 England Air Rifle Team
தங்கப் பதக்கம் – முதலிடம் 2001 England 3P(Individual)
தங்கப் பதக்கம் – முதலிடம் 2001 England 3P Team
தங்கப் பதக்கம் – முதலிடம் 2005 Melbourne Air Rifle Team
தங்கப் பதக்கம் – முதலிடம் 2005 Melbourne 3P (Individual)
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1999 Auckland 3P Team
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2001 England Air Rifle Team
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2005 Melbourne Air Rifle (Individual)

அஞ்சலி பகவத் (Anjali Bhagwat, பிறப்பு: திசம்பர் 5, 1969) ஒரு இந்திய துப்பாக்கி சுடுவதில் தொழில்முறை வல்லுநர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மீட்டர் காற்றழுத்த வெடி குழல் சுடும் போட்டியில் உலகின் முதல் பெண்ணாக தெரிந்தெடுக்கப் பட்டார். இவர் தனது முதல் உலகக் கோப்பையை மிலான் நகரில் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 399/400 என்ற கணக்கில் வென்றார்.

அஞ்சலி சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு பேரவையின் வெற்றி வாகையாளர்களுக்கு வெற்றி வீரர் என்ற விருதை வாங்கினார். மேலும் 2002 ஆம் ஆண்டு மியூனிச்சில் நடைபெற்ற ஆடவர் மகளிர் கலந்து நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு பேரவையின் காற்றழுத்த வெடி குழல் சுடும் போட்டியில் வெற்றி வாகையாளர் விருதை வாங்கினார். இந்தியாவில் இந்த விருதை வாங்கியவர் இவர் மட்டுமே. இவர் இந்தியாவின் பிரதிநிதியாக மூன்று முறை ஒலிம்பிக் பந்தயத்தில் தொடர்ச்சியாக பங்கேற்றார் மற்றும் 2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டு இவ்வாறு சுடுதல் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு தேர்ந்த்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண்ணானார். பொதுநலவாய விளையாட்டுகள் மற்றும் பொதுநலவாய சுடுதல் வாகையாளர் போட்டியில் இவர் 12 தங்கப் பதக்கங்களும் 4 வெள்ளி பதக்கங்களும் வென்றார். 10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் சுடும் போட்டி மற்றும் விளையாட்டு வெடிகுழல் 3புள்ளி போட்டிகளில்ல் பொதுநலவாய நடத்திய விளையாட்டுகளில் சாதனையாளர் ஆவார். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க – ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 3புள்ளி மட்டும் காற்றழுத்த வெடிகுழல் சுடுதல் போட்டியில் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை முறையே வென்ற முதல் இந்திய பெண்மணி ஆக பகவத வரலாறு படைத்தார்.

இதுவரை இவர், 31 தங்கப் பதக்கங்களையும், 23 வெள்ளி பதக்கங்களையும் மற்றும் 7 வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளார். சர்வதேச அளவில் 13 சாதனைகள் படைத்து 55 தங்கப் பதக்கங்களையும், 33 வெள்ளி பதக்கங்களையும் மற்றும் 16 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார். இந்திய அளவில் நடைபெற்ற தேசிய போட்டிகளில்13 புதிய சாதனைகள் படைத்துள்ளார்.

ஆரம்ப வாழ்வு[தொகு]

அஞ்சலி ராமாகாந்தா வேட்பதாக் 1969 ஆம் ஆண்டு திசம்பர் 5 ஆம் நாள் பிறந்தார்.[1] இவர் மும்பையில் உள்ள மராத்திய தேசஸ்தா பிராமண குடும்பத்தைச் சார்ந்தவர்.[2] பழம்பெரும் ஓட்டப் பந்தய வீர்ரான கார்ல் லூயிஸ் என்பாரின் வாழ்க்கை மூலமாக தூண்டப் பட்டு பகவத் விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார். சுடுதலுக்கான முதல் நிகழ்வு இவர் படைப்பயிற்சி மாணவராக தேசிய மாணவர் படையில் பயிற்சி பெறும் கால கட்டத்தில் நடந்தது. ஜூடோ கராத்தேயின் மாணவர் மற்றும் உயர்நிலை மலையேறுபவராக இருந்த பகவத் தேசிய மாணவர் படையை நோக்கி அதிகம் ஈர்க்கப் பட்டார். இவர் மும்பையில் உள்ள கிர்டி கல்லூரியில் கல்லூரிக்கும் தேசிய மாணவர் படைக்கும் உள்ள பிணைப்பினால் சேர்ந்தார். அவரின் கல்வித் திட்டத்தின் ஒரு பங்காக இவர் மகாராட்டிர சுடுதல் கூட்டமைப்பில் சேர்ந்தார். இவர் தனது 21 ஆம் அகவையில் வெடிகுழலில் சுட ஆரம்பித்தார். வெடிகுழலை கையில் ஏந்திய ஏழே நாட்களில் இவர் தேசிய சாதனையாளர் போட்டியில் பங்கேற்று மகாராட்டிராவிற்காக வெள்ளி பதக்கம் வென்றார்.

பணி[தொகு]

சஞ்சய் சக்கரவர்த்தி என்பார்தான் இவரின் முதல் பயிற்சியாளர். பகவத் தந்து ஐந்து ஆண்டு கால பயிற்சியில் தன்னுள் நிலைநிறுத்தப்பட்ட தனது வலுவான அடித்தளம் மற்றும் அடிப்படைக்கு காரணம் என்று பாராட்டுவது உண்டு. இவர் 1988 ஆம் ஆண்டு தனது முதல் தேசிய சாதனையாளர் போட்டியில் பங்கு ஏற்கும் போது ஆதரவாளராக மாறினார். அப்போட்டியில் இவர் வெள்ளி பதக்கத்தை வென்று தனது மாநிலத்திற்காக தொடர்ந்து விளையாடி வந்தார். அவரது உள்நாட்டு போட்டிகளில் வென்ற மொத்த பதக்கங்களான 55 தங்கம், 35 வெள்ளி மற்றும் 35 வெண்கலம் ஆகியவற்றின் எண்ணிக்கை இன்னும் முறியடிக்கப் படவில்லை.

இவர் தெற்காசிய போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் 1995 ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச போட்டியில் நுழைந்தார். 1999 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்றது இவரின் முதல் சர்வதேச தங்கப் பதக்கத்திற்கான போட்டி ஆகும். இப்போட்டியில் இவர் 3 தங்க பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்தை காற்றழுத்த வெடிகுழல் சுடுதல் மற்றும் தனியாள் மற்றும் குழு 3 உடல் அமர்வு நிலை போட்டிகளில் வென்றார். இவர் மட்டுமே இந்தியாவிற்கு உலக கோப்பையைப் பெற்றுத் தந்த பெண் ஆவார். இவர் தனது எதிர் போட்டியாளரான கால்கினா லியொவ்பௌ (ரசியா) என்பாரை தனது இலட்சிய போட்டியாளராகக் கருதுகிறார்.

1999 ஆண்டு திசம்பர் மாதம் இவர் தனது பயிற்சியை அப்போதைய இந்திய சுடுதல் குழுவின் பயிற்சியாளரான லாஸ்லோ ஸ்சுக்சாக் என்பாரின் கீழ் ஆரம்பித்தார். பக்வத் மலேசியாவின் சுடுதல் குழுவினரோடான லாஸ்லோவின் பணியை பார்த்த பிறகு தானே சென்று லாஸ்லோவை சந்தித்தார் . ஹங்கேரிய நாட்டினரான லாஸ்லோ தொடர்ந்து ஒரு வருடம் குழுவில் இருந்தார் அந்த வேளையில் பகவத் ஸிட்னியில் நடைபெற்ற 2000 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டிற்கான அடைவு சீட்டை பெற்றார், அங்கு அவர் இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பகவத் பயிற்சியாளர் இல்லாமலே பயிற்சி மேற்கொண்டார் ஆனாலும் சுடும் போட்டியில் உலகின் முதன்மை பெண்ணாக 2002 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பட்டார்.

2006 ஆம் ஆண்டின் போது லாஸ்லோ தேசிய சுடும் குழுவின் பயிற்சியாளராக மறுபடியும் சேர்ந்தார். அவரிடம் 2008 வரை பகத் பயிற்சி எடுத்துக் கொண்டார். 2008 ஆம் ஆண்டு ஸ்டானிஸ்லௌ லாபிடஸ் இந்திய தேசிய தரைப்படையின் மூலம் பயிற்சியாளராக தேசிய பயிற்சிபடை வீரர்கள் குழுவின் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டார். அநேக சுடுதல் விளையாட்டின் பிரபலங்கள் உலக சாதனையாளர் போட்டியை ஒலிம்பிக் போட்டியை விட உயரியதாக கருதுகின்றனர். பகவத் ”சாதனையாளர்களில் சாதனையாளர்” என்ற விருது பெற்றதன் மூலம் தனது வெற்றியை பட்டியலிட்டது அவரின் விளையாட்டு பணியில் ஒரு சிறந்த நேரமாகும். இன்றும் அவர்தான் அந்த விருது பெற்ற ஒரே இந்தியராக திகழ்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anjali Ramakanta Vedpathak-Bhagwat". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 6 August 2014. பரணிடப்பட்டது 2020-03-03 at the வந்தவழி இயந்திரம் "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-03-03. பார்க்கப்பட்ட நாள் 2020-03-03.
  2. Chitra Garg. Indian Champions: Profiles of Famous Indian Sportspersons. Rajpal & Sons2010. பக். 267. https://books.google.com/books?id=Fq1wdzqhu6kC. 

வெளி இணைப்புகள்[தொகு]

  • அஞ்சலி பகவத் பன்னாட்டு துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு அமைப்பில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலி_பகவத்&oldid=3532006" இலிருந்து மீள்விக்கப்பட்டது