அஞ்சலி நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சலி நாயர்
பிறப்பு16 சூலை 1988 (1988-07-16) (அகவை 35)
கொச்சி
தேசியம்இந்தியன்
பணிநடிகர், மாடல்
செயற்பாட்டுக்
காலம்
1994-1996
2010 - தற்போது
குறிப்பிடத்தக்க படைப்புகள்பென்
வாழ்க்கைத்
துணை
அனீஷ் உபசனா
பிள்ளைகள்அவனி [1]

அஞ்சலி நாயர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். [2] இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றவர். [3] [4] [5]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

உஷா மற்றும் கிரிதரன் நாயர் ஆகியோருக்கு அஞ்சலி பிறந்தார். மனதே வெள்ளிதெருவில் குழந்தை கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவருக்கு ஒரு மகள் அவனி, 5 சுந்தரிகள் என்ற திரைப்படத்தில் அஞ்சலி நாயருடைய ஐந்து மகள்களில் ஒரு மகளாக நடித்தார். [4] [6]

தொழில்[தொகு]

தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றுவதற்கும் முன்பு, 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். பின்னர் வினீத் ஸ்ரீனிவாசனின் லா கொச்சின் உட்பட பல இசை ஆல்பங்களில் நடித்தார். [6] அவர் "பந்தங்கள் பந்தங்களா" என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.

குறும்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் குறிப்பு
2015 புஞ்சிரிக்கு பரஸ்பரம் பள்ளி சிறுமியின் தாயார் குறும்படம்
2017 அமர் ஜவான் அமர் பாரத் இராணுவ வீரரின் மனைவி தேசபக்தி காணொளி
2017 ஒரு முத்தாசி கதா அஞ்சலி குறும்படம்
2017 சி டிசர்வ்ஸ் பெட்டர் லட்சுமி காணொளி
2017 நந்தா நந்தாவின் தாய்
2017 சித்ரா சித்ரா
2017 கேன்வாஸ் முரா மனு
2017 எந்தா இங்கனே? அம்மு இயக்குனரும் கூட
2018 நித்யஹரிதா காமுகன் பள்ளி சிறுவனின் தாய்
2018 சாகிதம் பாட்டி
2019 தி சீக்ரெட் ரோசினி
2019 ஒப்பனா சுகாரா சீனியர்


குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலி_நாயர்&oldid=3753833" இருந்து மீள்விக்கப்பட்டது