உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சலி காந்துவாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஞ்சலி காந்துவாலா (Anjali Khandwalla) இந்தியாவின் குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுகதை எழுத்தாளர் ஆவார். 1940 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். ஒரு பாடகராகவும் இவர் அறியப்படுகிறார். ஆவார். [1]

1970 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை கனடாவின் மாண்ட்ரீலில் உள்ள வானியர் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தார். 1975 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள அகமதாபாத்திற்குச் சென்று அங்கு குடியேறினார். [2]

பணிகள்

[தொகு]

இலீலோ சோக்ரோ என்ற பதின்பருவக் கதைத் தொகுப்பை அஞ்சலி எழுதியிருந்தார். அங்கினி இமரேட்டோ (1988) [1] என்பது பதினைந்து கதைகளைக் கொண்ட இவரது சிறுகதைத் தொகுப்பாகும். இந்த கதைகள் சூழ்நிலைகளின் உருவாக்கம், அவற்றின் விளக்கங்கள் மற்றும் வெளிப்பாடுகள் போன்றவற்றால் கவனத்தை ஈர்க்கின்றன. அஞ்சலியின் மற்றொரு சிறுகதைத் தொகுப்பான குகாட் கி பேட் கோல் அனைவராலும் நன்கு பாராட்டப்பட்டது. இதில் "சண்ட்லானோ வியாப்" மற்றும் சக்திபேட்டு ஆகியவை பெண்களை மையமாகக் கொண்ட கதைகளாகும். [3] [4]

மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான அரிசம யாத்ரா 2019 ஆம் ஆண்டு இவரது மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Kishore Jadav (2002). Contemporary Gujarati Short Stories: An Anthology. Indian Publishers Distributors. p. xxiv. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7341-226-4.
  2. Amina Amin (2002). New horizons in women's writing: a selection of Gujarati short stories. Gujarat Sahitya Academy.
  3. Brahmabhatt (2010). અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ - આધુનિક અને અનુઆધુનિક યુગ (History of Modern Gujarati Literature – Modern and Postmodern Era). Parshwa Publication. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5108-247-7.
  4. Indian Horizons. Indian Council for Cultural Relations. 1999. p. 156.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலி_காந்துவாலா&oldid=3416108" இலிருந்து மீள்விக்கப்பட்டது