உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சலி எலா மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சலி எலா மேனன்
பிறப்பு1922
மேற்கு வங்காளம், இந்தியா
பணிஓவியக் கலை

அஞ்சலி எலா மேனன் (Anjolie Ela Menon) 1940இல் பிறந்த இந்தியாவின் முன்னணி சமகால கலைஞர்களில் ஒருவர். அவரது ஓவியங்கள் பல வியாபார ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 2006 ஆம் ஆண்டில் இவரின் யாத்ராவை கலிபோர்னியாவின் சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம், பெற்றது. மர அட்டைகளின் மேல் நெய்யோவியம் வைத்து ஓவியங்கள் வரைவது இவருக்கு பிடித்தமான ஒன்றாகும். மேலும், கண்ணாடி மற்றும் நீர்வர்ணம் ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டவர். சுவர் ஓவியம் வரைவராக பரவலாக அறியப்பட்டவர், 2000இல் பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.[1] அவர் புது தில்லியில் வாழ்ந்து கொண்டு தனது பணியை மேற்கொள்கிறார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

அஞ்சலி எலா மேனன் 1940 ஜூலை 17இல், பெங்காளி மற்றும் அமெரிக்க பெற்றோருக்கு வங்காளத்தின் பர்ன்பூரில் (இப்பொழுது மேற்கு வங்கத்தில்) பிறந்தார்.[2] தமிழ்நாட்டின் நீலமலையில் உள்ள லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் பயின்றார். 15 வயதில், அவர் பள்ளியை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக சில ஓவியங்களை வரைந்துள்ளார். அதன் பின்னர் மும்பையில் உள்ள ஜே. ஜே கல்வி நிறுவனத்தில் பயின்றார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில்ஆங்கில இலக்கியம் பட்டம் பெற்றார் அங்கு பிரபலமான மகளிர் கல்லூரியான, மிராண்டா ஹவுஸில் படித்தார். இந்த சமயத்தில், அவர் மோடிக்லியானி மற்றும் இந்திய ஓவியர்கள், மக்புல் ஃபிதா உசைன் மற்றும் அம்ரிதா சேர்கில் ஆகியோரின் படைப்புகளுக்கு பணி புரிந்தார். 18 வயதில், அவர் தனித்துவமான பல்வேறு பாணிகளின் ஐம்பத்து-மூன்று ஓவியங்களை வைத்துக் கண்காட்சியை நடத்தினார். 1959 முதல் 1961 வரை பாரிஸின் இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் என்ற கல்லூரியில் படிப்பதற்காக அவருக்கு பிரெஞ்சு அரசின் உதவித்தொகை கிடைத்தது. மேலும் இவர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் உரோமனெசுக் மற்றும் பைசன்டியக் கலை படிப்பதற்குப் பயணித்தார். .

பிந்தைய வாழ்க்கை[தொகு]

அஞ்சலி தனது சிறுவயது காதலரான இந்தியக் கடற்படை அதிகாரி ராஜா மேனன், என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அட்மிரல் ஆகி ஓய்வு பெற்றார். அவர்கள் திருமணம் செய்துகொண்டதிலிருந்து, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் முந்தைய சோவியத் ஒன்றியத்தில் பணியாற்றி, இந்த நாடுகளில் முப்பத்தி ஐந்து தனி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளானர். அவர் சுவர் ஓவியம் மூலம்நன்கு அறியப்பட்டவர் மற்றும் பல நிகழ்ச்சிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

விருதுகள்[தொகு]

  • பத்மஸ்ரீ, 2000 ஆம் ஆண்டில் இந்தியாவில் நான்காவது மிக உயர்ந்த குடிமக்களுக்கான விருது.
  • த லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்.
  • டெல்லி என்சிடி அரசாங்கத்தின் வாழ்நாள் சாதனை விருது 2013
  • காளிதாஸ் சம்மன் விருது, 2018 மத்தியப் பிரதேச அரசிடம் இருந்து விஷுவல் ஆர்ட்ஸ் விருது.[3]

குறிப்புகள்[தொகு]

  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 ஜூலை 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Anjolie Ela Menon". www.contemporaryindianart.com. Archived from the original on 2017-10-12. பார்க்கப்பட்ட நாள் 2017-09-29.
  3. "Artist Anjolie Ela Menon conferred the Kalidas Award". 1 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலி_எலா_மேனன்&oldid=3585887" இலிருந்து மீள்விக்கப்பட்டது