உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சனா பௌமிக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சனா பௌமிக்கு
பிறப்புஆரத்தி பௌமிக்கு
(1944-12-30)30 திசம்பர் 1944
கூச் பெஹார் சுதேச அரசு, பிரிட்டிஷ் இந்தியா
இறப்பு17 பெப்ரவரி 2024(2024-02-17) (அகவை 79)
கல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1964–1987
வாழ்க்கைத்
துணை
அனில் சர்மா
பிள்ளைகள்நிலஞ்சனா சர்மா
சந்தன சர்மா
உறவினர்கள்ஜிஷு சென்குப்தா (மருமகன்)

அஞ்சனா பௌமிக்கு (Anjana Bhowmick) இந்தியாவில் 1960 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டுகள் வரை நடித்த ஒரு மேற்கு வங்காள திரைப்பட நடிகை ஆவார்.

பிறப்பு

[தொகு]

அஞ்சனா பௌமிக்கு 1944 ஆம் ஆண்டு திசம்பர் 30 அன்று மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள கூச் பெகார் என்னும் நகரில் பிறந்தார்.

கல்வி

[தொகு]

அஞ்சனா பௌமிக்கு 1961 ஆம் ஆண்டில் மேற்கு வங்க கல்வி வாரியத்தின் கீழ் கூச் பெகார் நகரில் உள்ள சுனிதி அகாடமியில் படித்து உயர்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சரோஜினி நாயுடு மகளிர் கல்லூரியில் படித்தார். தனது பள்ளி நாட்களை கூச் பெகர் நகரில் கழித்தார்

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவரது உண்மையான பெயர் ஆரத்தி பௌமிக்கு என்பதாகும். பாப்லி என்ற புனைப்பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். இவரது தந்தை பெயர் பிபூதி பூசன் பௌமிக் ஆகும். அஞ்சனா கடற்படை அதிகாரியான அனில் சர்மாவை மணந்து மும்பையில் குடியேறினார். இவரது மகள்கள் நிலஞ்சனா சர்மா மற்றும் சந்தன சர்மா ஆகியோராவர்.[1] இவர்கள் இருவரும் நடிகைகள். மூத்தவரான நிலஞ்சனா சர்மா, வங்காள திரைப்பட நடிகர் இயிசூ சென்குப்தாவை மணந்தார்.[2][3]

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

1964 ஆம் ஆண்டு பிச்சூசு போசு இயக்கிய அனுசுதூப் சந்தா என்ற திரைப்படத்தில் தனது 20 வயதில் பௌமிக்கு திரைப்படத்தில் அறிமுகமானார். . தனது முதல் படத்தின் வெளியீட்டிலேயே இவர் பிரபலமானார். இவரது நடிப்புத் திறமை பார்வையாளர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. உத்தம் குமாரின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவரானார். இவரும் உத்தம் குமாரும் வங்காள மொழியில் சௌரிங்கி, கோகோனோ மேக், நயிகா சங்க்பாத்து, ரௌத்ரா சாயா, ராச் துரோகி[4] போன்ற பெரிய வெற்றிப் படங்களை வழங்கினர்.

இறப்பு

[தொகு]

பௌமிக்கு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதியன்று தனது 79 ஆவது வயதில் இறந்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tollywood top girls on the go, at a glance". The Telegraph (Calcutta, India). 4 September 2004 இம் மூலத்தில் இருந்து 29 January 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090129183808/http://telegraphindia.com/1040904/asp/calcutta/story_3713869.asp. பார்த்த நாள்: 29 October 2008. 
  2. প্রতিবেদন, নিজস্ব. "অঞ্জনা ভৌমিকের বিরল ছবি শেয়ার করলেন সৃজিত". anandabazar.com (in Bengali). Retrieved 2023-04-14.
  3. "Veteran actor Anjana Bhowmick dies due to prolonged illness at 79". 17 February 2024.
  4. "Chowringhee actress Anjana Bhowmik passes away at 79". The Telegraph (India) (in ஆங்கிலம்). Retrieved 2024-02-17.
  5. "Veteran actor Anjana Bhowmick dies due to prolonged illness at 79". India Today (in ஆங்கிலம்). 17 February 2024. Retrieved 2024-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சனா_பௌமிக்கு&oldid=4223949" இலிருந்து மீள்விக்கப்பட்டது