அஞ்சணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காணமல் போன பொருள்கள் மற்றும் ஆட்கள் தொடர்பான தகவல்களை அறியும் நோக்கில் செய்யப்படும் சோதிடச் சடங்குமுறை அஞ்சணம் எனப்படும். அஞ்சண மை எனப்படும் ஒருவகை மையை வெற்றிலையில் இடுவதன் மூலம் அதில் தெரியும் அடையாளங்களைக் கொண்டு காணாமல் போன பொருள் பற்றிய குறிப்பு சொல்லப்படுகிறது. இது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பின்பற்றலாகும். இந்து சமயத்தைக் கடைப்பிடிக்கும் மக்களிடையே இந்நம்பிக்கை உள்ளது. பகுத்தறிவின் அடிப்படையில் இத்தகைய அறிதல்களை உறுதிப்படுத்தமுடியாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சணம்&oldid=2266732" இருந்து மீள்விக்கப்பட்டது