அஜ்மீரா ரேகா
அஜ்மீரா ரேகா | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), தெலங்காணா சட்டப் பேரவை | |
| பதவியில் 2014–2023 | |
| முன்னையவர் | சுமன் இரத்தோட் |
| பின்னவர் | வேதமா போஜூ |
| தொகுதி | கானாபூர், |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 19 பெப்ரவரி 1974 ஐதராபாத்து, இந்தியா |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (2023 முதல்) |
| பிற அரசியல் தொடர்புகள் | பாரத் இராட்டிர சமிதி (2023 வரை) |
| துணைவர் | அஜ்மீரா சியாம் நாயக் |
| வாழிடம் | கானாபூர், நிர்மல் மாவட்டம் |
| முன்னாள் மாணவர் | இளங்கலைச் சட்டம், உசுமானியா பல்கலைக்கழகம் (2013) முதுகலை சமூகவியல், உசுமானியா பல்கலைக்கழகம் (2010) இளங்கலை, உசுமானியா பல்கலைக்கழகம் (1999) |
அஜ்மீரா ரேகா (Ajmeera Rekha)(பிறப்பு 19 பிப்ரவரி 1974) ஓர் இந்திய அரசியல்வாதியும் தெலங்காணா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014, 2018-ஆம் ஆண்டுகளில் கானாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் பாரத் இராட்டிர சமிதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]
ஆரம்பகால வாழ்க்கை.
[தொகு]அஜ்மீரா தெலங்காணாவில் ஐதராபாத்தில் கே. சங்கர் சவுகான் மற்றும் கே. சியாமலா பாய் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். சனத்நகரில் கல்வி பயின்றார். இவரின் தந்தை பெல் நிறுவனத்தில் பணிபுரிந்தார், இவரின் தாயார் மாநில அரசு ஊழியராக இருந்தார். 2010-ஆம் ஆண்டில் வனிதா மகாவித்யாலயாவில் இளங்கலைப் பட்டமும், உசுமானியா பல்கலைக்கழகத்தில் முதுகலையில் சமூகவியல் பட்டமும் பெற்றார். 2013-ஆம் ஆண்டில் படலா ராம் ரெட்டி கல்லூரியில் இளங்கலைச் சட்டப் படிப்பினை முடித்தார்.[4]
அரசியல்
[தொகு]அஜிமீரா ஜில்லா பரிசத் உறுப்பினராக இருந்தார். 2009-ஆம் ஆண்டில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த இவர், 2014-ஆம் ஆண்டில் முதல் முறையாக பாரத் இராட்டிர சமிதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2018 சட்டமன்றத் தேர்தலில் இவர் மீண்டும் இக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் 2023 சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.[5] இவர் அக்டோபர் 6 அன்று பா.இ.ச. கட்சியிலிருந்து விலகினார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Awaiting Nabard report on locations for godowns: Harish".
- ↑ "No plans to increase Amma Vodi 102 vehicles: Laxma Reddy". 23 March 2018.
- ↑ "Rs 1,642 cr distributed under 'Kalyana Lakshmi' and 'Shaadi Mubaarak' schemes".
- ↑ "Ajmera Rekha | MLA | Khanapur | Nirmal | Telangana" (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-04-17. Retrieved 2023-11-15.
- ↑ Reddy, L Venkat Ram (2023-09-22). "List triggers dissent, Rekha Naik moves to Congress". Deccan Chronicle. Retrieved 2023-10-11.
- ↑ "బీఆర్ఎస్కు రేఖా నాయక్ రాజీనామా.. కేటీఆర్పై షాకింగ్ కామెంట్స్". Sakshi (in தெலுங்கு). 2023-10-06. Retrieved 2023-10-11.