அஜியாக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜியாக்கோ
Ajiaco
Ajiaco.jpg
பொகோட்டா நகரின் சிறப்பு உணவுகளுள் ஒன்றான அஜியாக்கோ
வகைசூப்
தொடங்கிய இடம்கொலம்பியா, கியூபா, பெரு
முக்கிய சேர்பொருட்கள்உருளைக் கிழங்கு

அஜியாக்கோ (Ajiaco) (எசுப்பானிய ஒலிப்பு: [aˈxjako]) என்பது கொலம்பியா, கியூபா மற்றும் பெரு போன்ற நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடும் ஒரு வகையான சூப் ஆகும்.[1][2] இது எந்த நாட்டில் முதலில் பயன்படுத்தினர் என்பது அறிஞர்களுக்கு விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது. கோழி இறைச்சி, மூன்று வகையான உருளைக்கிழங்கு மற்றும் சில மூலிகை பொருட்களை வைத்து இந்த சூப்பைத் தயாரிக்கிறார்கள். கியூபாவில் இதனைக் கட்டியான குழம்பாக தயாரிக்கிறார்கள். 

வரலாறு[தொகு]

இந்த உணவு எந்த நாட்டில் தோன்றியிருக்கலாம் என அறிஞர்கள் விவாதித்து வருகின்றனர்.[1] கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி ஆல்பிரடோ சயாஸ் அல்போன்சோ அஜியாக்கோவைப் பற்றி குறிப்பிடும் போது இது ”அஜி” என்ற இரையினோ மொழியிலிருந்து  பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் என்று எழுதியுள்ளார்.[3] ”அஜி” என்பதற்கு இரையினோ மொழியில் ”காரமான மிளகு” என்று பெயர்.

16 ஆம் நூற்றாண்டில் தான் அஜியாக்கோ கியூபா நாட்டில் பிரபலமானது, குறிப்பாக கிராமப்புற மக்கள் அதிகமாகப் பயன்படுத்தியிருந்தாலும் உயர்குடி மக்களும் சில சமயங்களில் அதனைப் பயன்படுத்தினர்.[4]

தயாரிப்பு[தொகு]

கொலம்பியாவின் பொகோட்டா நகர அஜியாக்கோ

கொலம்பியா[தொகு]

அஜியாக்கோ கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், பிரபலமான ஒரு உணவுப்பொருள்.  கோழி, மூன்று வகைகளில் உருளைக்கிழங்கு, மற்றும் மூலிகைபொருட்களைப் பயன்படுத்தி இதனைத் தயாரிப்பார்கள்.[5][6]

கியூபா[தொகு]

கியூபா நாட்டில் பன்றி இறைச்சி, கோழி, காய்கறிகள், மற்றும் பல்வேறு மாவு மற்றும் கிழங்குகளைப் பயன்படுத்தி இதனைத்  தயாரிப்பார்கள்.[1][7]

பெரு[தொகு]

பெரு நாட்டில்அஜியாக்கோவை மிகவும் வித்தியாசமான உணவாக தயாரிப்பார்கள். உருளைக்கிழங்கு , சமைத்த பூண்டு, உலர்ந்த மஞ்சள் மற்றும் சிவப்பு மிளகாய் , அரிசி மற்றும் சுண்டவைத்த கோழி அல்லது முயல் ஆகியவற்றைப் பயன்படுத்திச்  சுவையாகத் தயாரிப்பார்கள்.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Cuban Ajiaco Recipe". Tasteofcuba.com. 2014-06-03 அன்று பார்க்கப்பட்டது.
  2. Clark, Melissa (October 28, 2011). "From Colombia, the Ultimate One-Pot Meal". த நியூயார்க் டைம்ஸ். Accessed April 2016.
  3. "Ajiaco cobrero" (Spanish). Ecured.cu. 2014-06-03 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  4. "Emblematic dish: the ajiaco | Cubanow". 2014-06-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-06-28 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Ajiaco Bogotano (Colombian Chicken and Potato Soup)". Mycolombianrecipes.com. 2009-03-19. 2014-06-03 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Eatocracy". CNN. 2022-08-01 அன்று பார்க்கப்பட்டது.
  7. Garth, Hanna. 2013 Food and Identity in the Caribbean. Bloomsbury Press.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜியாக்கோ&oldid=3542310" இருந்து மீள்விக்கப்பட்டது