அஜினமோட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அஜினமோட்டோ என்பது ஒரு வகை உப்பு. இதன் வேதியியல் பெயர் “மோனோ சோடியம் குளுட்டமேட்”. அஜினமோட்டோ (யப்பானியம்:味の素株式会社) என்பது உண்மையில் ஒரு நிறுவனத்தின் பெயராகும். முதன் முதலில் இந்த உப்பைத் தயாரித்து விற்பனை செய்த இந்த நிறுவனத்தின் பெயரே நாளடைவில் இந்த உப்புக்கும் வந்துவிட்டது. 1920 ஆம் ஆண்டில் இந்த உப்பின் தேவை 20 டன்கள் தான். ஆனால் தற்போது இதன் தேவை 12 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது. இந்த அஜினமோட்டோ, நூடுல்ஸ், அசைவ உணவுகள், பிரியாணி, சீன உணவுகள், உடனடி உணவுகள் போன்றவற்றில் பயன்படுத்துவதால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் டோக்கியோவில் உள்ளது. தற்போது கிட்டதட்ட 100 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்னிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு 9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

பாதிப்புகள்[தொகு]

இந்த அஜினமோட்டோ சேர்க்கப்பட்ட உணவை அடிக்கடி உண்பவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்புகள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை போன்றவை வருவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். [மேற்கோள் தேவை]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அஜினமோட்டோ&oldid=1363059" இருந்து மீள்விக்கப்பட்டது