அஜித் (இந்தி நடிகர்)
அஜித் கான் | |
|---|---|
| பிறப்பு | அமீது அலி கான் 27 சனவரி 1922 கோல்கொண்டா கோட்டை, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
| இறப்பு | 22 அக்டோபர் 1998 (அகவை 76) ஐதராபாத்து (இந்தியா), ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1945-1995 |
| பிள்ளைகள் | சேசாத் கான் அர்பாசு அலி கான் |
அமீது அலி கான் (Hamid Ali Khan 27 சனவரி 1922-22 அக்டோபர் 1998), இவரது மேடைப் பெயரான அஜித் என்பதன் மூலம் பரவலாக அறியப்படும் இவர் இந்தித் திரைப்படங்களில் பெரும்பான்மையாகப் பங்களித்த ஓர் இந்திய நடிகர் ஆவார். சுமார் நான்கு தசாப்த காலப்பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.[1]
பெகாசூர், நாஸ்டிக், படா பாய், மிலன், பாரா தாரி போன்ற பரவலாக அறியப்படும் பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி நடிகராகவும், பின்னர் முக்ல்-இ-அசாம், நயா தார் ஆகிய படங்களில் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்தார்.[2][1]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]ஷாஜகான்பூரில் உள்ள ஒரு முஸ்லீம் குடும்பத்தில் ஹமீத் அலி கான் என்ற பெயரில் பிறந்த அஜித், ஐதராபாத் நகரில் வளர்ந்தார். அஜித்தின் மூதாதையர்கள் ஆப்கானித்தானில் உள்ள காந்தகாரில் இருந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாஜகான்பூருக்கு குடிபெயர்ந்து ஐதராபாத்தில் குடியேறிய பஷ்தூன்களின் பரோசாய் குலத்தைச் சேர்ந்தவர்கள்.[3] இவரது தந்தை ஐதராபாத் நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கானின் தனிப்பட்ட ஓட்டுநராக இருந்தார்.[1][4]
தொழில் வாழ்க்கை
[தொகு]அஜித் ஐதராபாத்தில் இருந்து முதலில் மும்பைக்கு வந்தபோது, முகமது அலி சாலையில் சிமென்ட் குழாய்களில் வசித்து வந்ததாகவும், இவரிடம் பணம் குறைவாக இருந்தது என்று அஜித்தின் மகன் செசாத் கூறுகிறார். உள்ளூர் குண்டர்கள் இந்தத் தற்காலிகத் தங்குமிடங்களைக் கட்டுப்படுத்தி, பாதுகாப்புத் தொகையைக் கோரினர், ஆனால் அஜித் பணம் கொடுக்க மறுத்து, போராடினார். மக்கள் இவருக்கு இலவச தேநீர், தின்பண்டங்கள், உணவை மரியாதையுடன் வழங்கத் தொடங்கினர் .[5] தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், மக்களைச் சந்திக்கவும், எந்தவொரு திரைப்படத் திட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்படவும் சிரமப்பட்டார்.நானா பாய் பட் ஆலோசனையின் பேரில், "அஜித்" என்ற பெயரை தனது திரைப் பெயராகப் பெற்றார். மதுபாலாவுடன் இணைந்து நடித்த பெகாசூர் (1950) 1950 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும்.[2] நாயகனாக அஜித்தின் படங்களில் நாஸ்டிக் (1953), படா பாய், மிலன், பரதாரி (1955) மற்றும் தோலக் (1951) ஆகியவை அடங்கும். பின்னர், இரண்டாவது முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார். அதில் நயா தௌர் மற்றும் முகல்-இ-அசாம் ஆகியவை அடங்கும்.[6][1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 "Villain Ajit, source of a zillion jokes, is dead". Rediff On The Net website. Archived from the original on 12 ஆகஸ்ட் 2014. Retrieved 19 October 2023.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)CS1 maint: bot: original URL status unknown (link). Rediff On The Net website. Archived from the original on 12 August 2014. Retrieved 19 October 2023. - 1 2 "Top Earners in India in 1950 - Box Office India". BoxOfficeIndia.com website. Archived from the original on 22 September 2012. Retrieved 19 October 2023."Top Earners in India in 1950 - Box Office India". BoxOfficeIndia.com website. Archived from the original பரணிடப்பட்டது 2012-09-22 at the வந்தவழி இயந்திரம் on 22 September 2012. Retrieved 19 October 2023.
- ↑ Rizvi, Iqbal (2022). Ajit the Lion: Biography of Ajit Khan - A Legend of Indian Cinema. Blue Rose Publishers. pp. 3–4.
- ↑ Kuldip Singh (7 November 1998). "Obituary: Ajit". The Independent newspaper இம் மூலத்தில் இருந்து 16 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131216212329/http://www.independent.co.uk/arts-entertainment/obituary-ajit-1183238.html.
- ↑ "अजीत खान हीरो बनने आए थे मुंबई, कुछ फिल्मों के बाद कैसे बने मशहूर विलेन, दिलचस्प है किस्सा". Navbharat Times (in இந்தி). Retrieved 2025-04-24.
- ↑ "Ajit filmography (click on TAB 'Show more' to expand)". British Film Institute (BFI) website. Archived from the original on 24 April 2022. Retrieved 20 October 2023.