அஜித் சிங் பெய்ன்ஸ்
அஜித் சிங் பெய்ன்ஸ் (AJITH SINGH BAINS) என்பவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர், மனித உரிமைச் செயல்பாட்டாளர்.
வாழ்க்கை
[தொகு]அஜித் சிங் பெய்ன்ஸ் மே 14,1922 அன்று பிறந்தவர். இவரின் தந்தைபெயர் குர்பகிஷ் சிங். இவர்1950இல் சட்டம் பயின்றார்.
பணிகள்
[தொகு]ஜலந்தரில் லயல்பூர் கல்சா கல்லூரியில் 1950 முதல் 1953வரை பொருளியல்துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1953 இல் ஓசியார்பூரில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1961ஆம் ஆண்டு முதல் சண்டிகர் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் துவங்கினார். 1974 முதல் 1984வரை சண்டிகர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பொறுப்பேற்றார். 1985ஆம் ஆண்டு பஞ்சாப் மனித உரிமைகள் அமைப்பை நிறுவி அன்றிலிருந்து அதன் தலைவராக உள்ளார். 1992இல் இவரது பேச்சிற்காக தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 1996இல் குற்றமற்றவர் என்று அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, ரூ 50,00ஐ இழப்பீடாக பெற்றார்.
வகித்த பிற பதவிகள்
[தொகு]- 1985இல் பஞ்சாப் விசாரணைக் கைதிகளின் வழக்குகள் மறு ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றினார்.
- 1991இல் உண்மையான கூட்டாட்சி அரசமைப்புச் சட்டம் கலந்தாய்வுக்குழுவின் தலைவர்.[1]
வெளி இணைப்புகள்
[தொகு]http://www.aapnapunjab.org/bio_bains.htm பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்
[தொகு]- ↑ சிந்தனையாளன் இதழ் மே 2015 பக்.32