அஜய் (2006 திரைப்படம்)
| அஜய் | |
|---|---|
விசிடி அட்டைப்படம் | |
| இயக்கம் | மெஹர் ரமேஷ் |
| தயாரிப்பு | ராக்லைன் வெங்கடேஷ் |
| கதை | எம். எஸ். ரமேஷ் |
| இசை | மணிசர்மா |
| நடிப்பு | புனீத் ராச்குமார், அனுராதா மேத்தா, பிரகாஷ் ராஜ் |
| ஒளிப்பதிவு | வாசு |
| படத்தொகுப்பு | மார்த்தாண்ட் கே. வெங்கடேஷ் |
| கலையகம் | ராக்லைன் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட். |
| விநியோகம் | ராக்லைன் புரொடக்ஷன்ஸ் |
| வெளியீடு | 4 மே 2006 |
| ஓட்டம் | 158 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | கன்னடம் |
அஜய் (Ajay) என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான இந்தியக் கன்னட மொழி அதிரடித் திரைப்படமாகும். இதனை மெஹர் ரமேஷ் இயக்கியுள்ளார். இது 2003ஆம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படமான ஒக்கடு திரைப்படத்தின் மறுஆக்கமாகும். இத்திரைப்படத்தில் புனீத் ராச்குமார், அனுராதா மேத்தா (இவரது முதல் கன்னடத் திரைப்படம்) மற்றும் பிரகாஷ் ராஜ் (இதே பாத்திரத்தை அவர் அசல் திரைப்படத்திலும் மற்றும் அதன் தமிழ் மறுஆக்கமான கில்லியிலும் நடித்திருந்தார்) ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். வாசு ஒளிப்பதிவு செய்ய, மார்த்தாண்ட் கே. வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். இத்திரைப்படம் 4 மே 2006 அன்று வெளியாகி வணிக ரீதியாக வசூல் சாதனை படைத்தது.[1]
நடிகர்கள்
[தொகு]- புனீத் ராச்குமார் - அஜய்
- அனுராதா மேத்தா - பத்மா என்கிற பட்டு
- பிரகாஷ் ராஜ் - வீரபத்ரா
- நாசர் - டிசிபி குமாரசாமி ஐபிஎஸ், அஜய்யின் தந்தை
- சுமித்ரா - அஜய்யின் தாய்
- ஸ்ரீநாத் - பத்மாவின் தந்தை
- தொட்டண்ணா - உள்துறை அமைச்சர் தொட்டண்ணா, வீரபத்ராவின் சகோதரர்
- தெலுங்கானா சகுந்தலா - சகுந்தலா, வீரபத்ராவின் தாய்
- அவினாஷ் - பரமசிவ மூர்த்தி
- சரிகம விஜி - தொட்டண்ணாவின் உதவியாளர்
- சத்யஜித்
- ஆர். ஜி. விஜயசாரதி
- டென்னிஸ் கிருஷ்ணா
- ரகு ராம்
- குறி சுனில்
- மகேஷ் ராஜ்
- வெங்கடேஷ் பிரசாத்
- சுவாமி நாதன்
- ஜெய் தேவ்
- கே. வி. மஞ்சய்யா
- விஸ்வாஸ் பரத்வாஜ்
- இந்துதர் பூஜாரி
- சைலஜா ஜோஷி
- அம்ருதா யாதவ்
- ஜூனியர் நரசிம்மராஜு
தயாரிப்பு
[தொகு]2005ஆம் ஆண்டு நிலவரப்படி, இத்திரைப்படத்திற்குப் பெயரிடப்படாமல் இத்தாலியில் சில பாடல்கள் படமாக்கப்பட்டன.[2]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். "ஏனே ஆகலி" என்ற பாடல் குடும்பா சங்கர் திரைப்படத்தில் உள்ள "சிட்டி நடுமுனே" பாடலை அடிப்படையாகக் கொண்டது. ஒக்கடு திரைப்படத்திலிருந்து "சாகசம்" மற்றும் "ராமா ராமா" ஆகிய பாடல்கள் மட்டுமே இந்த பதிப்பில் பயன்படுத்தப்பட்டன.
| அஜய் | |||||
|---|---|---|---|---|---|
| பாடல்
| |||||
| வெளியீடு | 21 சூன் 2006 | ||||
| இசைப் பாணி | திரைப்படப் பாடல்கள் | ||||
| |||||
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
|---|---|---|---|---|
| 1. | "இராம அண்ட கிருஷ்ணா அண்ட" | சங்கர் மகாதேவன் | ||
| 2. | "எனையுட்டு நானாகீதான" | கே. எஸ். சித்ரா, குணால் காஞ்சவாலா | ||
| 3. | "என் செண்ட" | சிரேயா கோசல் | ||
| 4. | "எனே ஆகாலி" | மல்லிகார்ஜுன் | ||
| 5. | "சாகச" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
வரவேற்பு
[தொகு]சிஃபி (Sify) இணையதளத்தின் விமர்சகர் ஒருவர் எழுதுகையில், இத்திரைப்படம் "பரிசோதிக்கப்பட்ட மற்றும் நிரூபிக்கப்பட்ட சூத்திரத்தைக் கொண்டுள்ளது, இது நல்ல தயாரிப்பு மதிப்புகளுடன் பொழுதுபோக்காகவும் உள்ளது" என்று குறிப்பிட்டு, "புனீத் ரசிகர்களுக்கு ஒரு விருந்து" என்று தெரிவித்தார்.[3] ரெடிஃப்.காம் (Rediff.com) விமர்சகர் ஒருவர், "ஒக்கடு திரைப்படத்தைப் பார்க்காத கன்னடத் திரைப்படப் பார்வையாளர்களின் பெரும்பகுதியினருக்கு அஜய் ஒரு சுவாரசியமான படைப்பாகும், ஆனால் அதன் தமிழ் மறுஆக்கமான கில்லி திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு இது சற்று ஏமாற்றத்தை அளிக்கலாம்" என்று எழுதினார்.[4] சித்ரலோகா.காம் (Chitraloka.com) விமர்சகர், "அதிரடித் திரைப்பட விரும்பிகள் யாரும் இந்தத் திரைப்படத்தைத் தவறவிட முடியாது" என்று தெரிவித்தது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Puneet Raj Kumar: Ready with Ajay". Rediff.com. 4 April 2006.
- ↑ "No news but still in news!". Viggy.com. 2005. Retrieved 14 January 2025.
- ↑ "Ajay". Sify. 12 May 2006. Archived from the original on 12 November 2021.
- ↑ RG Vijayasarathy (8 May 2006). "Aajay: Could have been better". Rediff.com.
- ↑ CNB (5 May 2006). "ACTION EXTRAVAGANZA: Puneeth, Prakash Rai Excel Again: Film Review : 'AJAYA'". Chitraloka.com. Archived from the original on 5 May 2007.