அஜய் இரசுதோகி
அஜய் இரசுதோகி | |
|---|---|
| நீதிபதி-இந்திய உச்ச நீதிமன்றம் | |
| பதவியில் 2 நவம்பர் 2018 – 17 சூன் 2023 | |
| பரிந்துரைப்பு | ரஞ்சன் கோகோய் |
| நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
| தலைமை நீதிபதி-திரிபுரா உயர் நீதிமன்றம்[1] | |
| பதவியில் 1 மார்ச்சு 2018 – 1 நவம்பர் 2018 | |
| பரிந்துரைப்பு | தீபக் மிசுரா |
| நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
| நீதிபதி-இராசத்தான் உயர் நீதிமன்றம் | |
| பதவியில் 4 செப்டெம்பர் 2004 – 28 பெப்ரவரி 2018 | |
| பரிந்துரைப்பு | இரமேஷ் சந்திர லகோதி |
| நியமிப்பு | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 18 சூன் 1958 செய்ப்பூர், இராசத்தான், இந்தியா |
அஜய் இரசுதோகி (Ajay Rastogi-பிறப்பு சூன் 18,1958) என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். இவர் திரிபுரா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாகவும், இராசத்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார்.[2][3]
தொழில் வாழ்க்கை
[தொகு]நீதிபதி அஜய் இரசுதோகி 1958-இல் பிறந்தார். இவர் இளம் வணிகவியல், இளநிலைச் சட்டப் பட்டங்களைப் பெற்றுள்ளார். 1982ஆம் ஆண்டில் வழக்கறிஞராகப் பதிவுசெய்யதுகொண்ட இவர், அரசியலமைப்பு, குடிமைப் பணி, தொழிலாளர் விடயங்களில் இராசத்தான் உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். இவரது சிறப்புத் துறை சேவை மற்றும் தொழிலாளர் சட்டம் ஆகும். இவர் 2 செப்டம்பர் 2004 அன்று இராசத்தான் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், மே 29, 2006 அன்று நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இவர் 2018 மார்ச் 1 அன்று திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் இரசுதோகி 2 நவம்பர் 2018 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[4] இவர் சூன் 17, 2023 அன்று பணி ஓய்வு பெற்றார்.[5]
உச்சநீதிமன்றத்தில் தனது பதவிக்காலத்தில், இரசுதோகி 158 தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.[6] ஜல்லிக்கட்டு நடைமுறைக்கு சவால்கள், விபச்சாரத்தை குற்றமற்றதாக்குவது, கருணைக்கொலைக்கான உரிமை குறித்த வாதங்களைக் கேட்ட இருக்கையில் இரசுதோகி நீதிபதியாக இருந்தார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hon'ble Mr. Justice Ajay Rastogi". High court of Tripura. Retrieved 2 November 2018.
- ↑ "Breaking: Justices Hemant Gupta, R Subhash Reddy, M R Shah and Ajay Rastogi Appointed As Supreme Court Judges". Live Law. 1 November 2018. Retrieved 2 November 2018.
- ↑ "Ranjan Gogoi-led collegium recommends 4 chief justices for elevation to Supreme Court". Samanwaya Rautray. The Economic Times. 1 November 2018. Retrieved 2 November 2018.
- ↑ "Provisional- Judges Handbook- as on 1.5.2017 | Department of Justice | Ministry of Law & Justice | GoI". doj.gov.in (in ஆங்கிலம்). Retrieved 4 November 2018.
- ↑ ""Independent judge doesn't mean being anti-establishment": Justice Ajay Rastogi at farewell function". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-05-19. Retrieved 2023-06-28.
- ↑ "Justice Ajay Rastogi: Number of Judgements Authored". Supreme Court Observer (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-09-30.
- ↑ "Ajay Rastogi". Supreme Court Observer (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-09-30.