அஜய்பால் சிங் பங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஜய்பால் சிங் பங்கா
The President, Shri Pranab Mukherjee presenting the Padma Shri Award to Shri Ajaypal Singh Banga, at a Civil Investiture Ceremony, at Rashtrapati Bhavan, in New Delhi on March 28, 2016.jpg
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி (வலது) பத்மசிறீ விருது வழங்கும் நிகழ்ச்சி (2016)
தாய்மொழியில் பெயர்ਅਜੈਪਾਲ ਸਿੰਘ ਬੰਗਾ
பிறப்பு1960 (அகவை 60–61)
புனே, இந்தியா
குடியுரிமைஅமெரிக்க ஐக்கிய நாடுகள் [1]
கல்விதில்லி பல்கலைக்கழகம் (BA)
அகமதாபாத், இந்திய மேலாண்மை கழகம் (முதுகலை வணிக மேலாண்மை)
பணிமாஸ்டர்கார்டு நிறுவனத்தின் தலைவர்
முன்னிருந்தவர்இராபர்ட் செலான்டர்

அஜய்பால் சிங் பங்கா (Ajaypal Singh Banga) (பிறப்பு 1960) இவர் ஒரு இந்திய-அமெரிக்க வணிக நிர்வாகியாவார். [2] அவர் மாஸ்டர்கார்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். [3] முன்னதாக அதன் தலைவரும் தலைமை இயக்க அதிகாரியுமான பங்கா 2010 சூலை 1 முதல் முதன்மை செயல் அலுவராகவும், இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் உடனடியாக செயல்படுவார் என்று மாஸ்டர்கார்டு ஏப்ரல் 2010 இல் அறிவித்தது. [4]

மார்ச் 1997 முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த இராபர்ட் டபிள்யூ. செலாண்டருக்குப் பிறகு பங்கா அப்பதவிக்கு வந்தார். [3]

பிப்ரவரி 2015 இல், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான அதிபரின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பணியாற்ற பங்காவை நியமித்தார். [5]

இந்தியாவில் முதலீடு செய்யும் மிகப்பெரிய சர்வதேச நிறுவனங்களில் 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க-இந்தியா வர்த்தக கூட்டமைப்பின் (யு.எஸ்.ஐ.பி.சி) முன்னாள் தலைவரும், சர்வதேச வர்த்தக சபையின் தலைவராகவும் இருக்கிறார். [6] இவர் டொவ் கெமிக்கல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார்; வெளிநாட்டு உறவுகள் அமைப்பின் உறுப்பினர்; மற்றும் உலக பொருளாதார மன்றத்தின் சர்வதேச வர்த்தக அமைப்பின் உறுப்பினர் போன்ற பொறுப்புகளிலும் இருக்கிறார். [7]

இந்திய அரசு இவருக்கு 2016 ல் பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது. [8]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இந்தியாவின் மகாராட்டிராவின் புனேவின், கட்கியில் 1960 ல் ஒரு சீக்கிய குடும்பத்தில் பங்கா பிறந்தார். அங்கு இவரது தந்தை, ராணுவ அதிகாரியாக இருந்தார். [9] இவரது குடும்பம் முதலில் பஞ்சாபின் ஜலந்தரைச் சேர்ந்தது. இவரது தந்தை ஹர்பஜன் சிங் பங்கா ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியாக இருந்தார். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். இவர் தொழிலதிபர் எம்.எஸ்.பங்காவின் தம்பியாவார். [10]

தனது தந்தையின் இராணுவப்பணி காரணமாக இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் பயின்றார். செகந்திராபாத், ஜலந்தர், தில்லி, அகமதாபாத் போன்ற இடங்களில் படித்து கடைசியாக சிம்லாவில் பள்ளிப்படிப்பை முடித்தார். [11]

கல்வி[தொகு]

இவரது ஆரம்பக் கல்வி பேகம்பேட்டையில் உள்ள ஐதராபாத் பொதுப் பள்ளியில் முடிக்கப்பட்டது. தில்லி பல்கலைக்கழகத்தின் புனித ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் மேலாண்மையில் பட்டம் பெற்றார். [3] [4] [12]

தொழில்[தொகு]

1981 ஆம் ஆண்டில் நெஸ்லேவுடன் தனது வணிக வாழ்க்கையைத் தொடங்கிய பங்கா, அடுத்த 13 ஆண்டுகளை விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் பொது மேலாண்மை போன்ற வேலைகளில் பணியாற்றினார். பின்னர் இவர் பெப்சிகோவில் சேர்ந்தார். பின்னர், பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டதால் அதன் சர்வதேச துரித உணவு உரிமைகளை இந்தியாவில் தொடங்குவதில் ஈடுபட்டார். [13]

பங்கா நியூயார்க் அறிவியல் அமைப்பின் அறங்காவலர் குழுவின் துணைத் தலைவராகவும், தேசிய நகர அமைப்பின் குழு உறுப்பினராகவும் இருந்தார். இவர் முன்னர் சிட்டி குழுமத்தின் ஆப்பிரிக்க பாரம்பரிய வலையமைப்பான என்ஒய்சியின் வணிக ஆதரவாளராக இருந்தார்.

சமூக அபிவிருத்தி விடயங்களில் பங்காவுக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. மேலும் 2005 முதல் 2009 நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியில், உலகெங்கிலும் உள்ள நுண் நிதித் துறையில் சிட்டி வங்கியின் மூலோபாயத்திற்கு இவர் தலைமை தாங்கினார். [3]

பங்கா பல்வேறு நிதி தொழில்நுட்ப மாநாடுகள் மற்றும் பல்வேறு தலைமை மாநாடுகளில் வழக்கமான பேச்சாளராக இருக்கிறார். 2014 நவம்பர் 6 அன்று ஜிம் கிராமர் தொகுத்து வழங்கிய மேட் மணி நிகழ்ச்சியிலும் இவர் தோன்றினார் [14]

மே 22, 2014 அன்று நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் 2014 பட்டதாரிகள் மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராக இருந்த பங்கா, அங்கு கண்டுபிடிப்பு மற்றும் தலைமைத்துவத்தில் பன்முகத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். [15] 2015 ஆம் ஆண்டு மாநாட்டின் போது தான் படித்த கல்வி நிறுவனமான அகமதாபாத், இந்திய மேலாண்மை கழகத்தில் ஒரு முக்கிய பேச்சாளராகவும் இருந்தார். [16] [17]

2020 ஆம் ஆண்டில் பால் போல்மனுக்குப் பிறகு சர்வதேச வர்த்தக சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக ஐசிசியின் முதல் துணைத் தலைவராக சூன் 2018 முதல் பணியாற்றினார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்பால்_சிங்_பங்கா&oldid=3079551" இருந்து மீள்விக்கப்பட்டது