அச்சு முறுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அச்சு முறுக்கு (அச்சப்பம்)
முறுக்கு தயாரிக்க பயன்படுத்தப்படும் அச்சு
அச்சு முறுக்கு (அச்சப்பம்)
பரிமாறப்படும் வெப்பநிலைபணியாரம்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்அரிசி மாவு

அச்சு முறுக்கு ஒரு பிரத்யேக வகை அச்சை பயன்படுத்தி சுடப்படுகிறது. கேரள மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்தில், கிறிஸ்தவர்களிடையே திருமணம் போன்ற சிறப்பு நாட்களில் அச்சு முறுக்கு அல்லது அச்சப்பம் இன்றியமையாத பணியாரம் ஆகும். இந்தப் பணியாரம் செய்யும் முறை மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்று கருதப்படுகிறது.

செய்முறை[தொகு]

முறுக்கு தயாரிக்கும் அச்சின் வரைபடம்

அரிசி மாவில் 4 முதல் 6 வரை கோழிமுட்டை உடைத்து ஊற்றி, தேங்காய் பால் பயன்படுத்தி பிசைய வேண்டும். இதில் சற்று சீரகம் மற்றும் எள்ளு ஆகியவை கலந்து கிண்ட வேண்டும். விருப்பம் போல் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம். கொதிக்கும் தேங்காய் எண்ணெயில் முக்கி சூடு செய்த மாவின் முக்கால் வாசி வரையில் எண்ணெயில் விட்டு மாவு படிந்த பிறகு அதை தேங்காய் எண்ணெயில் அழுத்திப் பிடிக்க வேண்டும். சற்று நேரத்திலேயே அச்சில் உள்ள மாவு தானாகவே விடுபட்டு தேங்காய் எண்ணெயில் விழும். அது சிவப்பு நிறமாக மாறும்போது எடுத்து எண்ணெய் வடிகட்டி நீக்கவும். ஈரம் இல்லாத பாத்திரத்தில் அச்சு முறுக்கினை பாதுகாப்பாக இரண்டு மாதங்கள் வரையில் வைக்க முடியும். சர்க்கரை அல்லது வெல்லப் பாகு செய்து அச்சு முறுக்கில் பயன்படுத்தலாம்.

படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சு_முறுக்கு&oldid=3016113" இருந்து மீள்விக்கப்பட்டது