உள்ளடக்கத்துக்குச் செல்

அச்சுச் சமச்சீர்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்பரிமாணத்தில் ஒரு அச்சைப் பொறுத்த சுழற்சியில் பெறப்படும் சுழற்பரப்பு அச்சுச் சமச்சீர்மை கொண்டிருக்கும்.
ஐங்கோணப் பட்டகத்தில் அமையும் ஐந்து வரிசை அச்சு சமச்சீர்மை

அச்சுச் சமச்சீர்மை (Axial symmetry) என்பது ஒரு அச்சைப் பொறுத்தமையும் சமச்சீர்மையாகும். ஒரு அச்சைப் பொறுத்துச் சுழற்றப்படும்போது தோற்றத்தில் மாற்றமடையாத பொருட்கள் அச்சுச் சமச்சீர்மையுடையவை எனப்படுகின்றன.[1] எடுத்துக்காட்டாக, மேற்பரப்பில் எந்தவித அடையாளங்களும் கொண்டிராத பந்து அல்லது வட்டத்தட்டினை அதன் நடு அச்சைப் பற்றிச் சுழற்றினால் அவற்றின் தோற்றத்தில் எந்தவொரு மாற்றமிருக்காது. எனவே அவை அச்சுச் சமச்சீர்மை கொண்டைவை.


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Axial symmetry" American Meteorological Society glossary of meteorology. Retrieved 2010-04-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சுச்_சமச்சீர்மை&oldid=3303385" இலிருந்து மீள்விக்கப்பட்டது