உள்ளடக்கத்துக்குச் செல்

அச்சிலவுன் ஆளுநரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜ்லவுன் ஆளுநரகம்
محافظة عجلون
அஜ்லவுன் கவர்னரேட்டின் தலைநகரமான, அஜ்லவுன் நகரம்
அஜ்லவுன் கவர்னரேட்டின் தலைநகரமான, அஜ்லவுன் நகரம்
Ajloun Governorate in Jordan
Ajloun Governorate in Jordan
நாடுஜோர்டான்
தலைநகரம்அஜ்லவுன்
பிணைப்பிராந்தியங்கள்Ajloun Department, Kofranjah Department
அரசு
 • ஆளுநர்அலி அஸ்ஸாம்
பரப்பளவு
 • மொத்தம்420 km2 (160 sq mi)
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்1,46,900
 • அடர்த்தி350/km2 (910/sq mi)
நேர வலயம்GMT +2
 • கோடை (பசேநே)+3
Urban75.9%
Rural24.1%
ம.மே.சு. (2017)0.735[1]
high · 2nd

அஜ்லவுன் கவர்னரேட் (Ajloun Governorate, அரபு மொழி: محافظة عجلون‎ ) என்பது ஜோர்டானின் ஆளுநரகங்களில் ஒன்றாகும், இது ஜோர்டானின் தலைநகரான அம்மானுக்கு வடக்கே அமைந்துள்ளது. அஜ்லவுன் ஆளுநரகம் ஜோர்டானில் நான்காவது மிக உயர்ந்த மக்கள் அடர்த்தி கொண்டது (இர்பிட், ஜெராஷ், பால்கா கவர்னரேட்டுகளுக்கு அடுத்து). இதன் மக்கள்தொகை அடர்த்தி 350.1 பேர் / கிமீ² (2012 மதிப்பீடு) கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக தென்கிழக்கில் ஜெராஷ் கவர்னரேட், வடக்கிலும், மேற்கிலிம் இர்பிட் கவர்னரேட் ஆகியவை உள்ளன

நிர்வாக பிரிவுகள்

[தொகு]

உள்துறை அமைச்சகத்தின் நிர்வாக பிரிவு அமைப்பின் சட்டப் பிரிவு 14 அஜ்லவுன் கவர்னரேட்டை இரண்டு துறைகளாக பிரிக்கிறது.

  • 1. தலைநகர் துறை : 50 நகரங்கள் மற்றும் கிராமங்களை உள்ளடக்கியது, அதன் நிர்வாக மையம் அஜ்லவுனில் உள்ளது .
  • 2. கோஃப்ராஞ்சா துறை : 19 நகரங்கள் மற்றும் கிராமங்களை உள்ளடக்கியது, அதன் நிர்வாக மையம் கோஃப்ரான்ஜாவில் உள்ளது.

வரலாறு

[தொகு]

அதிக உயரத்தில் உள்ள, அஜ்லவுன் பகுதி ஜோர்டானில் மிக அழகான காடுகள் கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். மேலும் இது நீண்ட குளிர்காலத்திற்கு பெயர் பெற்றது. இது இங்குள்ள அரண்மனைக்கு ( அஜ்லுன் கோட்டையகம் ) பிரபலமானது. அதன் பழைய பெயர் கல்அத் சலா அட்-டீன் என்பதாகும். அஜ்லவுன் புவியியலை சிலுவைப் போர் வீரர்களிடமிருந்து பாதுகாக்க இந்த கோட்டையகம் ஒரு அரணாக கட்டப்பட்டது.

காலநிலை

[தொகு]

அஜ்லவுன் அதன் உயரமான இடத்திற்குப் பெயர் பெற்றது. இது ஜோர்டானின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. சனவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 8.2 செ, மற்றும் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 2.8 செ என இருக்கும். குளிர்காலத்தில் பனி பொதுவாக பொழியும்.

புள்ளிவிவரங்கள்

[தொகு]

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிவுகளின்படி மாவட்டங்களின் மக்கள் தொகை : [2]

மாவட்டம் மக்கள் தொகை
(மக்கள் தொகை கணக்கெடுப்பு 1994)
மக்கள் தொகை
(மக்கள் தொகை கணக்கெடுப்பு 2004)
மக்கள் தொகை
(மக்கள் தொகை கணக்கெடுப்பு 2015)
அஜ்லவுன் கவர்னரேட் 94,548 118,725 176,080
குஃப்ராஞ்சா 20,809 27,107 38,260
குவாசாபா 'அஜ்சியோன் 73,739 91,618 137,820

பொருளாதாரம்

[தொகு]

அஜ்லவுன் கவர்னரேட் முக்கியமாக வேளாண்மையை சார்ந்துள்ளது. 2008 ஆம் ஆண்டில், ஆலிவ், திராட்சை, பழ பண்ணைகளின் மொத்த பரப்பளவு 141.4 கி.மீ 2 ஆகும். இது அஜ்லவுன் கவர்னரேட்டின் பரப்பளவில் 34% ஆகும். [3]

கல்வி

[தொகு]

அஜ்லவுனில் 28 ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை அரசு பள்ளிகளாக உள்ளன. அஜ்லவுன் பல்கலைக்கழகக் கல்லூரி ஒரு அரசு கல்லூரியாகவும், அஜ்லவுன் தேசிய பல்கலைக்கழகமாகவும் உள்ளது, என ஒரு சிறிய தனியார் பல்கலைக்கழகம் உள்ளது.

குறிப்பிடத்தக்க கிராமங்கள்

[தொகு]

அஜ்லவுன் ஆளுநரகத்தில் (அஜ்லவுனைத் தவிர) மிகவும் குறிப்பிடத்தக்க நகரங்கள் மற்றும் கிராமங்களாக : இபீன் "எபீன்", சக்ரா, மிரஜ்ஜாம், ரசவுன், ஐன் ஜன்னா, குஃப்ரான்ஜி, அஞ்சாரா, அல் ஹாஷிமியா மற்றும் (ஓர்ஜன்) ஆகியவை உள்ளன.

காட்சியகம்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
  2. "Jordan: Administrative Division, Governorates and Districts". citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 25 December 2016.
  3. "Ministry of Agriculture - Jordan (Arabic)". moa.gov.jo. Archived from the original on 2012-03-03. பார்க்கப்பட்ட நாள் 2012-05-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சிலவுன்_ஆளுநரகம்&oldid=3083855" இலிருந்து மீள்விக்கப்பட்டது