அச்சிடப்பட்ட தமிழ் நூல்களின் வகைப்படுத்தப்பட்ட பட்டியல் (1865 நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அச்சிடப்பட்ட தமிழ் நூல்களின் வகைப்படுத்தப்பட்ட பட்டியல் (Classified catalogue of Tamil printed books) என்பது 1865 இல் யான் மர்டாக் அவர்களால் வெளியிடப்பட்ட ஒரு ஆங்கில நூல் ஆகும். இதில் அதுவரைக்கும் அச்சிடப்பட்டு வெளிவந்த 1755 தமிழ் நூல்கள் பற்றிய விபரங்கள் துறை வாரியாக தொகுக்கப்பட்டுள்ளன. அக்காலத் தமிழ் இலக்கியம், தமிழ் அச்சுத்துறை, வெளிநாட்டாரின் மொழி சார்ந்த நடவடிக்கைகள் பற்றிய பல அரிய தகவல்களும் இதில் உள்ளன. இந்த நூல் முழுமையாக கூகிள் நூல்களில் கிடைக்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]