அச்சாணிக்கு எதிராக அளவிடும் முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அச்சாணிக்கு எதிராக அளவிடும் முறை மங்கோலிய பீடபூமியில் வாழ்ந்த மங்கோலியர்கள் மற்றும் பிற பழங்குடியினரால் பயன்படுத்தப்படும் எதிரி குடிமக்களில் யார் தலையை வெட்டுவது என்பதை தீர்மானிக்கும் ஒரு வழிமுறையாக இருந்தது.

செங்கிஸ் கான் 1202ல் ஜமுக்காவின் பழங்குடியினர் கூட்டணிக்கு எதிராக இந்த கொடூரமான முறையைப் பயன்படுத்தினர். அனைத்து ஆண் கைதிகளும் ஒரு வண்டிச் சக்கரம் அருகே நடக்க வேண்டிய கட்டாயப்படுத்தப்பட்டது. அச்சாணியை (அச்சு முனையில் செருகப்படுகிற ஒரு முள்) விட அவர்களின் தலை உயரமாக இருந்தால், அவை உடனடியாகத் துண்டிக்கப்பட்டன. வண்டிச் சக்கரமானது யுர்ட் மற்றும் பிற பொருட்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஒரு பெரிய சக்கரம் ஆகும். இந்த முறை பழங்குடிகளுக்கு இடையே நடைபெறும் பொதுவான பழிவாங்கல் தாக்குதல்களுக்கு எதிராக முன்னதாகவே பயன்படுத்தப்பட்டது. ஒரு பழங்குடி ஒரு தாக்குதலை நடத்தியிருந்தால், விரைவில் ஒரு பழிவாங்கும் தாக்குதல் நடக்கும் சாத்தியம் எப்பொழுதும் இருந்தது. வயதான ஆண்களை நீக்குவதன் மூலம், பல நூற்றாண்டுகளாக அவநம்பிக்கையிலும், கொள்ளையுடனும், இடைவிடாத மோதல்களிலிருந்த பழங்குடியினரிடமிருந்து ஒரு பதில்தாக்குதலுக்கு குறைவான வாய்ப்பு இருந்தது.

மேற்கோள்[தொகு]

Gabriel, Richard A. (2004) Subotai the Valiant: Genghis Khan's greatest general Greenwood Publishing ISBN 0-275-97582-7

கம்மின்ஸ், ஜோசப் (2006) History's Great Untold Stories: Obscure events of lasting importance, Murdoch Books, ISBN 978-1-74045-808-5