அச்சல்வாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சல்வாடி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636903

அச்சல்வாடி (Achalvadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் அச்சல்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு 45 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 261 கிலோமீடர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°00'13.2"N 78°29'41.8"E[2]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 808 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2907 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1471 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1436 என்றும் உள்ளது. கிராமத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 66.2 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சல்வாடி&oldid=3600618" இலிருந்து மீள்விக்கப்பட்டது