அச்சம்மா மாத்தாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சம்மா மாத்தாய்
பிறப்புகேரளம், இந்தியா
பணிசமூகப்பணியாளர்
வாழ்க்கைத்
துணை
ஜான் மத்தாய்
விருதுகள்பத்மசிறீ

அச்சம்மா மத்தாய் (Achamma Mathai) ஒரு இந்திய சமூக சேவகர், பெண்கள் உரிமை ஆர்வலர், காலிகட் பல்கலைக்கழகத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம், மேலாண்மை, நாடக கலை மற்றும் இசைத்துறைகளில் செயற்பட்ட டாக்டர் ஜான் மத்தாய் மையத்தின் இணை நிறுவனர். இந்தியாவின் முதல் ரயில்வே அமைச்சரும் முன்னாள் நிதியமைச்சருமான |ஜான் மத்தாயின் மனைவியுமாவார். [1] அவர் தில்லியில் தங்கியிருந்தபோது, அவரது கணவர் மத்திய அமைச்சகத்தில் பணியாற்றியபோது, அவர் குழந்தைகளின் கல்வி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின்போது, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக சுசேதா கிருபலானியுடன் இணைந்து பணியாற்றினார். அவர் 1955 இல் நூலகங்களுக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார் [2] மற்றும் அறுபதுகளின் துவக்கத்தில் மத்திய சமூக நல வாரியத்தின் தலைவராக இருந்தார். 1954 ஆம் ஆண்டில் இந்திய அரசு, சமுதாயத்திற்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக நான்காவது மிக உயர்ந்த இந்திய சிவில் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்தது. [3]

குறிப்புகள்[தொகு]

  1. "JMCTSR". JMCTSR. 2015. Archived from the original on 17 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Virendra Kumar (Editor) (1975). "Committees and Commissions in India, 1947-73: 1977 (4 v.)". Concept Publishing Company. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015. {{cite web}}: |last= has generic name (help)
  3. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சம்மா_மாத்தாய்&oldid=3540515" இலிருந்து மீள்விக்கப்பட்டது