அச்சன்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அச்சன்கோவில் என்னும் ஊர், கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் வட்டத்தில் உள்ளது. இது புனலூர் நகரத்தில் இருந்து 80 கி.மீ. வடகிழக்கில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மையத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அய்யப்பன் கோயில் புகழ் மிக்க கோயிலாகும். இங்கு ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இந்த ஊரின் நடுவில் பள்ளிவாசல் என்ற ஆறு பாய்கிறது.

மலம்பண்டாரம் எனப்படும் பழங்குடியினர் வாழும் இடம். இது தென்மலை ஊராட்சிக்கு உட்பட்டது.

கோயில்[தொகு]

இங்குள்ள அய்யப்பன் கோயிலைப் பரசுராமர் நிறுவியதாகக் கருதுகின்றனர். ஆன்மீகத் தலம் என்பதால், மலையாளிகளைக் காட்டிலும் தமிழகத்துப் பக்தர்களே அதிகம் வருகின்றனர். தனு மாதத்தில் மண்டல பூஜையும், மகர மாதத்தில் ரேவதி பூஜையும் செய்கின்றனர். மண்டல பூஜையின் போது தேரோட்டமும், ரேவதி பூஜையில் புஷ்பாபிஷேகமும் முக்கியமான சடங்குகள். வண்ணமயமான ஆடையும் ஆபரணங்களும் அணிந்து, வாளைக் கையிலேந்திய அய்யப்பனின் சிலை காண்பிக்கப்படும்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சன்கோவில்&oldid=2266690" இருந்து மீள்விக்கப்பட்டது