அச்சனுர்
அச்சனூர் Achanur | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 16°14′09″N 75°49′37″E / 16.2358000°N 75.827000°E | |
நாடு | ![]() |
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | கருநாடகம் |
மாவட்டம் (இந்தியா) | பாகல்கோட்டை |
வட்டம் (தாலுகா) | பாகல்கோட்டு |
அரசு | |
• நிர்வாகம் | கிராமப் பஞ்சாயத்து |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 587111 |
அருகிலுள்ள நகரம் | பாகல்கோட்டு |
குடிமை நிறுவனம் | கிராமப் பஞ்சாயத்து |
அச்சனுர் (Achanur) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் உள்ள ஒரு கிராமமாகும். கர்நாடகாவின் பாகல்கோட்டு மாவட்டத்தின் பாகல்கோட்டு தாலுகாவில் இக்கிராமம் அமைந்துள்ளது.[1]
பாகல்கோட்டு நகரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அச்சனுர் கிராமம் உள்ளது.
மக்கள் தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அச்சனூர் கிராமத்தின் மக்கள் தொகை 1844 நபர்களாக இருந்தது. இதில் 916 ஆண்களும் 928 பெண்களும் இருந்தனர். அச்சனுரில் மொத்தம் 345 குடும்பங்கள் வசித்தன. அச்சனுர் கிராமத்தில் 0-6 வயதுடைய குழந்தைகள் 261 பேர் இருந்தனர். இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 14.15% ஆகும். அச்சனுர் கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 1013 ஆகும், இது கர்நாடக மாநில சராசரியான 973 என்பதை விட அதிகமாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அச்சனூரில் குழந்தை பாலின விகிதம் 1008 ஆகும். இதுவும் கர்நாடக சராசரியான 948 என்பதை விட அதிகமாகும்.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yahoo! maps India :". Archived from the original on 2008-12-18. Retrieved 2009-04-17. Achanur, Bagalkot, Karnataka
- ↑ "Achanur Village Population - Bagalkot - Bagalkot, Karnataka". www.census2011.co.in. Retrieved 2025-01-20.