அச்சச்சோ
அச்சச்சோ | |
---|---|
இயக்கம் | வி. எஸ். பால்ரே |
தயாரிப்பு | ஐ. லீமா ரோஸ் |
கதை | வி. எஸ். பால்ரே |
இசை | எம். கே. எஸ். நருலா கான் |
நடிப்பு | சிறீ அரி வர்சினி |
ஒளிப்பதிவு | சி. டி. அருள் செல்வன் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | ரோசி பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 4, 2007 |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அச்சச்சோ (Achacho ) என்பது வி. எஸ். பால்ரே இயக்கிய 2007ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். இப்படத்தில் புதுமுகங்கள் ஸ்ரீ ஹரி, வர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இதில் சண்முகசுந்தரம், தலைவாசல் விஜய், இலாவண்யா, குமரிமுத்து, நம்பிராஜன், பொன்மறன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஐ. லீமா ரோஸ் தயாரித்த இப்படத்திற்கு, எம். கே. எஸ். நருலா கான் இசை அமைத்துள்ளார். இப்படம் 2007, மே 4, அன்று வெளியிடப்பட்டது.[1][2]
கதை
[தொகு]மருத்துவர் தயாளன் (பாய்ஸ் ராஜன்) பத்திரிகைகளுக்கு செவ்வி அளிப்பதாக படம் தொடங்குகிறது: இந்தியாவில் பெண் சிசுக்கொலை செய்வதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று அவர் கூறுகிறார், மேலும் வரும் ஆண்டுகளில் குறைந்த எண்ணிக்கையிலான பெண்கள் இருப்பதனால் ஏற்படும் விளைவுகளை விளக்குகிறார்.
ஒரு தொலைதூர கிராமத்தில், கிராமத் தலைவர் நட்டமை ( சண்முகசுந்தரம் ) ஒற்றைப் பெண்ணை திருமணம் செய்துகொள்வது யார் என்பதைத் தீர்மானிக்க ஒரு போட்டியை ஏற்பாடு செய்கிறார். கிராமத்தில் திருமணமாகாத இருபத்தி நான்கு இளைஞர்களும், இன்னும் வயதுக்கு வராத ஏழு சிறுமிகளும் உள்ளனர். கிராமத்து பழக்க வழக்கம், கட்டுப்பாடு போன்றவற்றால் அந்த கிராமத்து இளைஞர்கள் பிற கிராமங்களைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது, எனவே அவர்கள் தங்கள் கிராமத்து பெண் பருவ வயதை அடையும் வரை காத்திருக்க வேண்டும். பருவமடைந்த பெண்ணை மணப்பது யார் என்பதை போட்டி தீர்மானிக்கும். கிராம பஞ்சாயத்தில், தங்கள் கிராமத்தைச் சேர்ந்த பதினான்கு வயது சிறுமி வெண்ணிலா (வர்ஷினி) நகரத்தில் வசிப்பதை நட்டமாய் அறிகிறார். பின்னர் வெண்ணிலா (வர்ஷினி) கிராமவாசிகளில் ஒருவரை நான்கு ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்ளவேண்டுமென்று கட்டளையிடுகிறார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, வெண்ணிலா கிராமத்திற்கு வருகிறாள். இருபத்தி நான்கு ஆண்கள் அவளை கவர்ந்திழுக்க முயற்சிக்கிறார்கள். பின்னர், பணக்கார நகைக்கடைக்காரரின் மகன் குமரன் (ஸ்ரீ ஹரி) வெண்ணிலாவுக்கு தனது தந்தை சொன்னபடி நகைகளை கொடுக்க கிராமத்திற்கு வந்து தற்செயலாக அவளை முத்தமிடுகிறான். பல சந்திப்புகளுக்குப் பிறகு, அவர்கள் இறுதியில் ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள். இதற்கிடையில், ஒரு இளைஞன் வேறொரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஓடிப்போகிறான், நாட்டமை அதைப் பற்றி அறிந்ததும், அவர் அவர்களைப் பிடித்துவந்து, பொது இடத்தில் உயிருடன் எரிக்கிறார்.
கடந்த காலத்தில், ஒரு ஜோதிடர் இரக்கமற்றவரான கிராமத் தலைவர் முத்துலிங்கத்திடம் (நம்பிராஜன்) எதிர்காலத்தில் ஒரு பெண் பிள்ளை கிராமத்தை அழித்துவிடும் என்று கூறுகிறார், எனவே முத்துலிங்கம் ஊரில் அனைத்து பெண் குழந்தைகளையும் கொன்றுவிடுகிறார். பல ஆண்டுகள் கடந்த நிலையில், கிராமத்தில் பெண் பிள்ளைகள் யாரும் இல்லாத நிலை ஏற்படுகிறது. முத்துலிங்கத்தின் மரணத்திற்குப் பிறகு, புதிய கிராமத் தலைவர் இந்த மனிதாபிமானமற்ற செயலை நிறுத்துகிறார். இதுவே கிராமத்தில் பெண்கள் குறைவாக இருக்கக் காரணம் ஆகிறது.
நடைமுறைக்கு ஒவ்வாத வழக்கத்தால் சோர்ந்துபோன நட்டமையும் கிராம மக்களும் குமாரனும் வெண்ணிலாவும் ஒன்றாக வாழ அனுமதிக்கிறார்கள். இளைஞர்களும் மற்ற கிராமங்களைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
நடிகர்கள்
[தொகு]- சிறீ அரி குமரனாக
- வர்சினி வெண்ணிலாவாக
- சண்முகசுந்தரம் (நடிகர்) நாட்டமையாக
- தலைவாசல் விஜய் பெரியசாமியாக
- இலாவண்யா தேவியாக
- குமரிமுத்து குமரிமுத்தாக
- நம்பிராஜன் முத்துலிங்கமாக
- பொன்ராம் வெண்ணிலாவின் தந்தை சாமிகணாக
- முத்துக்காளை தேநீர் கடை ஊழியர்
- பெஞ்சமின் பனிக்கூழ் விற்பனையாளராக
- பாய்ஸ் ராஜன் தயாளனாக
- சகாதேவன்
- மகாதேவன்
- சென்றாயன்
- சுஜா வருணே சிறப்புத் தோற்றத்தில்
- சீமா சிறப்புத் தோற்றத்தில்
தயாரிப்பு
[தொகு]ரோஸி பிக்சர்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட அச்சாச்சோ படத்தின் வழியாக இயக்குநராக வி. எஸ். பால்ரே அறிமுகமானார். கதாநாயகனாக நடிக்க புதுமுகம் ஸ்ரீ ஹரி தேர்வு செய்யப்பட்டார், கதாநாயகியாக நடிக்க புதுமுகம் வர்ஷினி (பிரியாசிறீ என குறிப்பிடப்பட்டுள்ளார்) தேர்ந்தெடுக்கப்பட்டார். திருமணம் ஆகாத இளைஞர்களாக இருபத்தி நான்கு புதுமுகங்கள் நடித்தனர். படத்திற்கு எம். கே. எஸ். நருலா கான் இசையமைத்தார், சி. டி. அருள் செல்வன் ஒளிப்பதிவை மேற்கொண்டார். சுரேஷ் அர்ஸ் படத் தொகுப்பை மேற்கொண்டார். இப்படம் முழுவதும் கோபிசெட்டிபாளையத்தில் படமாக்கப்பட்டது.[3][4]
இசை
[தொகு]படத்தின் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் எம். கே.எஸ். நருலா கான் அமைத்தார். 2007 இல் வெளியிடப்பட்ட இசைப்பதிவில், வி.எஸ். பால்ரே எழுதிய வரிகளைக் கொண்ட ஆறு பாடல்கள் இருந்தன.[5][6] இசையமைப்பாளர் தன் பணிக்காக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார்.[7]
எண் | பாடல் | பாடகர் (கள்) | காலம் |
---|---|---|---|
1 | "பசங்க பாவம்" | மாதங்கி ஜெகதீஷ் | 5:31 |
2 | "ஆல்லிபூவே" | ஹரிஷ் ராகவேந்திரா, பிரசன்னா | 5:16 |
3 | "ஏய் ஏய்" | சுனிதா சாரதி | 5:32 |
4 | "தொட்டு விடு" | சுனிதா சரதி | 5:33 |
5 | "பெண்கள்" | உண்ணிமேனன், மஹதி | 5:17 |
6 | "பாத்துக்கோடா" | திப்பு, மகாதி | 3:53 |
வரவேற்பு
[தொகு]ஒரு விமர்சகர் எழுதுகையில், "அச்சாச்சோவுக்கு ஒரு நல்ல கருப்பொருள் கிடைத்தாலும், படத்தில் உள்ள தர்க்கரீதியான குறைகளால் இரண்டாம் பாதி கதை தடுமாறுகிறது".[8] மற்றொரு விமர்சகர், "தற்போதைய காலத்தில் இதுபோன்ற ஒரு கதை சம்பவத்தை நம்பமுடியாதது, ஆனால் 24 புதிய முகங்களை நிர்வகித்து, கதையை ஒரு காமிக் கோணத்தில் நகர்த்தியதற்காக இயக்குனரை தலை வணங்குகிறேன்".[9]
குறிப்புகள்
[தொகு]
- ↑ "Achacho (2006) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
- ↑ "Jointscene : Tamil Movie Achacho". jointscene.com. Archived from the original on 13 November 2011. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
- ↑ "பிரியாஸ்ரீ.. அச்சச்சோ" [Priyasri.. Whoops] (in Tamil). filmibeat.com. 5 February 2004. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "அச்சச்சோ என்ற பெயரில் உருவாகிறது ஒரு படம்" [A film titled Achacho] (in Tamil). filmibeat.com. 5 February 2004. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Achacho (2006) - Nerula Khan". mio.to. Archived from the original on 9 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Achacho Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
- ↑ "Achacho Music Review". indiaglitz.com. Archived from the original on 16 செப்டெம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச்சு 2019.
- ↑ "Achacho - Review". indiareel.com. Archived from the original on 22 October 2007. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
- ↑ "Achacho". cinesouth.com. Archived from the original on 19 October 2008. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.