அசோஸ்பைரில்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசோஸ்பைரில்லம் (Azospirillum) பாக்டீரியா வகையைச் சார்ந்த ஒரு நுண்ணுயிரி ஆகும். மண்ணில் வாழும் இந்நுண்ணுயிரி காற்றிலுள்ள தழைச்சத்தை ஈர்த்து நிலைநிறுத்தி நெற்பயிருக்கு அளிக்கவல்லது. இது காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து 'இணைகூட்டு வாழ்' முறையில் நெற்பயிரின் வேர் மற்றும் வேர் சூழ் மண்டலத்தில் செயல்படுகிறது. பயறு வகைகளில் தோன்றும் ரைசோபியம் போல் வேர்களில் முடிச்சுகளை ஏற்படுத்தாமல் பயிரிடும்பொழுது பயிரோடு சேர்ந்து தழைச்சத்தை நிலைநிறுத்தும் தன்மை கொண்டது அசோஸ்பைரில்லம். பயிரிடப்படாத போது மண்ணில் தனித்து வாழும் நெற்பயிர் ஒளிச்சேர்க்கை மூலம் உற்பத்தி செய்யும் மாவுச்சத்தினை அசோஸ்பைரில்லம் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாகக் காற்றிலுள்ள தழைச்சத்தினைப் பிடித்து நெற்பயிருக்குக் கொடுக்கிறது. இதைத் தவிர பயிரின் வேர் வளர்ச்சியையும் மகசூலையும் அதிகரிப்பதுடன் வறட்சியைத் தாங்கும் திறனையும் கொடுக்கிறது.

அசோஸ்பைரில்லத்தின் வகைகள்[தொகு]

அசோஸ்பைரில்லத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன.

  • அசோஸ்பைரில்லம் பிரேசிலன்ஸி. இது, தானிய மற்றும் காய்கறிச் செடிகளில் செயலாற்றுவது.
  • அசோஸ்பைரில்லம் ரைப்போரெம். இது, நெல், வாழை, கரும்பு ஆகிய பயிர்களில் செயலாற்றுவது.

மேற்கோள்கள்[தொகு]

  • "நிலவளம்", ஜனவரி,2008, சென்னை:தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோஸ்பைரில்லம்&oldid=3594090" இருந்து மீள்விக்கப்பட்டது